ரச்சிதா மகாலட்சுமி வீட்டில் டானிக் ரூம்.. ஆத்தாடி இவ்வளவு சரக்கா?.. ஒவ்வொன்றும் என்ன விலை தெரியுமா?
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மேற்கொண்டு பிரபல்யத்தை கொடுத்தது. அந்தப் போட்டியிலிருந்து எவிக்ட் ஆன பிறகு சினிமாக்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான ஃபயர் படம் தோல்வியடைந்தது. ஆனால் அவரது கேரக்டர் கவனத்தை ஈர்த்தது. இப்போது 99/66 என்ற பேய் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே வைரல் ஆகியிருக்கிறது.
பெங்களூரில் பிறந்து தமிழ்நாட்டில் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. அந்த சீரியல்கள் அனைத்தும் அவருக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தன. அந்த சமயத்தில் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்ட அவர்; தன்னால் முடிந்த அளவுக்கு திறமையாகவே விளையாடினார். ஆனால் டைட்டிலை வெல்ல முடியாமல் பாதியிலேயே எவிக்ட் ஆனார். இருப்பினும் அவருக்கென மேற்கொண்டு ரசிகர்கள் உருவாகினார்கள்.

ரச்சிதாவுக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்புகள்: பிக்பாஸிலிருந்து எவிக்ட் ஆன பிறகு அவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் சரளமாக வர ஆரம்பித்தன. அப்படி அவர் நடித்த படம் ஃபயர். பிக்பாஸ் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் படத்தின் ஒரு பாடலில் ரச்சிதா காண்பித்திருந்த கிளாமர் அனைத்து ரசிகர்களையும் வாய் பிளக்க வைத்தது. பட ரிலீஸ் சமயத்தில் ரச்சிதாவின் கிளாமர் பெரிய பேசுபொருளானது. பணத்துக்காக மட்டும் நான் இப்படி நடிக்கவில்லை; கதைக்கு தேவைப்பட்டதால்தான் இவ்வளவு கிளாமர் காண்பித்தேன் என்று விளக்கமும் அளித்தார்.
பேய் படத்தில் ரச்சிதா மகாலட்சுமி: இருப்பினும் அதீத விமர்சனத்தை சந்தித்தது. அதையெல்லாம் ரச்சிதா ஒருகட்டத்துக்கு மேல் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இப்போது அவர் 99/66 என்ற படத்தில் நடித்திருக்கிறார். பேய் பட ஜானரில் உருவாகியிருந்தது படம். பேய் படங்களுக்கு எப்போது கோலிவுட்டில் டிமாண்ட் அதிகம் என்பதால் கண்டிப்பாக இது வெற்றியடையும் என்ற ஆர்வத்தில் இருந்தார். ஆனால் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
ரச்சிதா பேட்டி: இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி அளித்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சேனலிலிருந்து ரச்சிதாவின் ஹோம் டூர் செய்தார்கள். அப்போது தனது வீட்டை சுற்றி காண்பித்த அவர்; தனது டானிக் ரூமை காண்பித்தார். அந்த டானிக் ரூம் என்பது மினி பார் அகும். அதில் ஏராளமான வெளிநாட்டு மது வகைகளும், ஒயின் வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தலா 25,000 ரூபாயிலிருந்து விலை ஆரம்பிக்கும்படி இருக்கிறது. வாரத்துக்கு ஒரு நாள் ஒயினை இரண்டு, மூன்று கிளாஸ்கள் குடித்தால் போதும். தோல் எல்லாம் பளபளப்பாகும் எனவும் அவர் விளக்கினார்.


Click it and Unblock the Notifications















