கையில் விருதுடன் ரச்சிதா மகாலட்சுமி.. நீங்க என்னை மறக்கவில்லை.. நெகிழ்ச்சியான பதிவு!
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக இருக்கிறார். சின்னத்திரை,சினிமா என இரட்டிலும் நடித்து வரும் இவருக்கு 'People's fav for the decade' விருது வழங்கப்பட்டுள்ளது. இதை அவர் மகிழ்ச்சியான தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கன்னட தொலைக்காட்சிகளில் நடித்து வந்த ரச்சிதா மகாலட்சுமி, பிரிவோம் சந்திப்போம் என்கிற தொடரில் நடித்து தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து, விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த சீரியலை பார்த்த இளசுகள் பலர் இவர் அழகில் மயங்கினார். அந்த சீரியலைத் தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வந்த இவர் சினிமாவில் நடிக்க தொடங்கி, உப்பு கருவாடு என்ற படத்தில் நடித்தார்.
ரச்சிதா மகாலட்சுமி: அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதா சிறப்பாக விளையாடி, மேலும் ரசிகர் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரச்சித்தாவின் நடிப்பில் தல்லி மனசு, எக்ஸ்டீம், பயர், என கடந்த ஆண்டு 3 படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டு 99/66 என்கிற க்ரைம் திரில்லர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அண்மையில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

விருது: இந்நிலையில், நடிகை ரச்சிதா மகாலட்சுமிக்கு, சின்னத்திரை 'People's fav for the decade' விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் கையில் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் ரச்சித்தா, எப்போது மக்கள் நம்மை மறந்துவிட்டதாக நீங்கள் உணர்கிறீர்களோ, சரியாக அந்தத் தருணத்தில்தான், "இல்லை, அவர்கள் உங்களை மறக்கவில்லை" என்று இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கு உணர்த்துகிறது. நான் தொடர்ந்து ஆற்றிவரும் பணிகளுக்காக, இன்றும் நான் நினைவுகூரப்படுகிறேன் என்ற உணர்வை இந்த நிகழ்வு எனக்குள் ஏற்படுத்தியது. "இப்பத்தாண்டின் மக்களின் விருப்பத்திற்குரியவர்" (People's fav for the decade) என்ற அங்கீகாரம், எனக்கு ஒரு கனவு போன்ற, அமானுஷ்யமான தருணமாக அமைந்தது. உங்கள் அன்பு அனைத்திற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். பல ரசிகர்களும் அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











