ரச்சிதா மகாலட்சுமியின் 99/66.. புது ரூட்டில் போறாங்களே.. எங்கெல்லாம் ஷூட்டிங் தெரியுமா?

சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையில் நடித்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். அந்த நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அப்படி அவர் Fire படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவர் ஓவர் கிளாமர் காட்டியிருந்தது ரிலீஸ் சமயத்தில் பெரிய பேசுபொருளானது. இப்போது 99/66 என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

பெங்களூருவை சேர்ந்த ரச்சிதா மகாலட்சுமி தமிழில் சீரியலில் நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர் நடித்த சரவணன் மீனாட்சி 2 சீரியல் பட்டித்தொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தது. அந்த சீரியலின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். சின்னத்திரையின் சாவித்திரி என்றும் அவரை ரசிகர்கள் அழைத்துவந்தார்கள். எப்படியாவது சினிமாவில் வென்றுவிட வேண்டும் என்று இருந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா: அதன்படி பிக்பாஸில் கலந்துகொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினார். அவர் கலந்துகொண்டபோது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அவரிடம் நெருக்கமாக பழக முயன்றது அனைவரிடமும் பேசுபொருளானது. நிகழ்ச்சியின் பாதியில் எவிக்ட் செய்யப்பட்ட ரச்சிதா; வெளியே வந்து சினிமா வாய்ப்புகளை பெற ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த படம்தான் Fire.

Rachitha Mahalakshmi Starrer 99 66 Filmed at Buddhist Monasteries
Photo Credit:

ஓவர் கிளாமர்: பிக்பாஸ் பாலாஜி ஹீரோவாக நடித்திருந்த அப்படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக தோன்றியிருந்தார் ரச்சிதா. படத்தில் மற்ற ஹீரோயின்கள் காட்டிய கிளாமரைவிடவும் இவர் காண்பித்த கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. இதனால் ரிலீஸ் சமயத்தில் பெரிய விவாதமானது. அதேசமயம் பணத்துக்காக நான் இவ்வளவு கிளாமரை காண்பிக்கவில்லை; கதைக்கு தேவைப்பட்டதால் காண்பிக்கிறேன் என்றும் விளக்கமளித்திருந்தார்.

99/66: அப்படத்துக்கு பிறகு சில படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர்; இப்போது 99/66 என்ற படத்தில் நடித்திருக்கிறார். எம்.எஸ்.மூர்த்தி என்பவர் இயகியிருக்கிறார். இதில் சிங்கம்புலி, பவன் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி எம்.எஸ்.மூர்த்தி பேசுகையில், "சென்னையில் 99 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இந்தப் படத்தின் கதை நடக்கிறது. அதனால்தான் 99/66 என்று பெயர் வைத்திருக்கிறோம். அந்த குடியிருப்பில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் குடியிருப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது. அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை ரச்சிதா, சபரி, ஸ்வேதா கண்டுபிடிக்கிறார்கள்.

புத்த மடாலயங்களில் ஷூட்டிங்: அவர்களால் அதை கண்டுபிடிக்க முடிந்ததா என்பது திரைக்கதை. இலங்கை, பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருக்கும் புத்த மடாலயங்களில் 500க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் மத்தியில் பாடல்களையும் சில சீன்களையும் ஷூட் செய்திருக்கிறோம். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X