அடியேய் எனக்கு கொஞ்சம் கொடு.. ரச்சிதா மகாலட்சுமியும், விசித்திராவும் இப்படி சண்டை போடுறாங்களே.. செம ஃபன்

சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு சினிமாக்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஃபயர் படம் தோல்வியடைந்தாலும் அதில் அவர் காட்டியிருந்த கிளாமர் பெரும் கவனத்தை ஈர்த்தது. இப்போது 99/66 என்ற பேய் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் மற்றும் விசித்திரா தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.

சின்னத்திரையில் நடித்து தமிழ்நாட்டில் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரை சாவித்திரி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். பல சேனல்களில் பல சீரியல்களில் நடித்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்ட அவர்; தன்னால் முடிந்த அளவுக்கு திறமையாகவே விளையாடினார். ஆனால் டைட்டிலை வெல்ல முடியாமல் பாதியிலேயே எவிக்ட் ஆனார்.

திரைப்பட வாய்ப்புகள்: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் ஆன பிறகு அவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி அவர் நடித்த படம்தான் ஃபயர். பிக்பாஸ் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் படத்தின் ஒரு பாடலில் ரச்சிதா காண்பித்திருந்த கிளாமர் அனைத்து ரசிகர்களையும் வாய் பிளக்க வைத்தது. சீரியல் சாவித்திரியா இப்படி என்று பேச்சில்லாமல் அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.

Rachitha Mahalakshmi Vichithra Fun Video Goes Viral Shooting Spot Food Moment Trends on Social Media
Photo Credit:

பணத்துக்காக இல்லை: பட ரிலீஸ் சமயத்தில் ரச்சிதாவின் கிளாமர் பெரிய பேசுபொருளானது. பணத்துக்காகத்தான் இவ்வளவு தூரம் கிளாமர் காண்பிக்கிறார் என்றெல்லாம் குரல்கள் கேட்டன. ஆனால் பணம் ஒன்றுக்காக மட்டும் நான் இப்படி நடிக்கவில்லை; கதைக்கு தேவைப்பட்டதால்தான் இவ்வளவு கிளாமர் காண்பித்தேன் என்று விளக்கமும் அளித்தார். ஆனாலும் ஒருதரப்பினர் அவர் கவர்ச்சி காண்பித்ததை மோசமாகவே விமர்சனம் செய்தார்கள்.

பேய் படத்தில் ரச்சிதா: அதையெல்லாம் ரச்சிதா காதில் போட்டுக்கொள்ளவில்லை. இப்போது அவர் 99/66 என்ற படத்தில் நடித்திருக்கிறார். பேய் பட ஜானரில் உருவாகியிருக்கிறது படம். இப்படத்தின் ஷூட்டிங் பல புத்த மடாலயங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்தப் படமும் தனக்கு பெரிய திருப்புமுனையை தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ரச்சிதா. இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

என்ன வீடியோ?: அதாவது ஒரு ஷூட்டிங் இடைவேளையில் அசைவ உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் ரச்சிதா. அவருக்கு அருகில் விசித்திராவும் இருக்கிறார். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ரச்சிதாவிடம், எனக்கு கொஞ்சம் கொடு டி என கேட்க; அதெல்லாம் மாட்டேன் என்று க்யூட்டாக சொல்கிரார் ரச்சிதா. உடனே விசித்திராவோ, சமைத்தால் அடுத்தவங்களுக்கும் கொஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு; பரவாயில்லை இதில் மானம், ரோஷம் எல்லாம் பார்க்கக்கூடாது என்று சொல்லி சாப்பாட்டை சாப்பிடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ இரண்டு பேரும் அசைவ பிரியைகளோ யாரும் விட்டுக்கொடுக்கவில்லையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X