ஃபயர் படம் பார்த்த வேலை.. ரச்சிதா மகாலட்சுமிக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்.. பூஜையே போட்டாச்சு!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ஃபயர் திரைப்படம் ரச்சிதாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

அந்த படத்தில் நான்கு நடிகைகள் நடித்திருந்தாலும் ரட்சிதா மகாலட்சுமி மற்றும் சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட நடிகைகளுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சாந்தினி தமிழரசன் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும், சமீப காலமாக அவருக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

Rachitha Mahalakshmi who starred in Fire movie now started a new movie and shared pooja video

சுழல் 2 வெப்சீரிஸில் நடித்த அவர் கடந்த வாரம் வெளியான பெருசு திரைப்படத்திலும் லீடு ரோலில் நடித்திருந்தார். ஃபயர் திரைப்படம் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்து வரும் நிலையில், அதே போல ரச்சிதா மகாலட்சுமிக்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

விஜய் டிவி மூலம் கிடைத்த பிரபலம்: தமிழ் தொலைக்காட்சிகளில் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் தொலைக்காட்சியாகவும் ஏகப்பட்ட சினிமா பிரபலங்களை உருவாக்கி வரும் தொலைக்காட்சியாகவும் விஜய் டிவி விளங்கி வருகிறது. சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு, ரியோ ராஜ், கவின், சாக்‌ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஷிவானி நாராயணன், டிடி நீலகண்டன், ஜாக்குலின், கேபிஒய் பாலா என பல பிரபலங்களை உருவாக்கி வரும் விஜய் டிவியிலிருந்து இன்னொரு பிரபலமாக ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து கலக்கி வருகிறார்.

கணவரால் நேர்ந்த கொடுமை: பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்ற தினேஷ் உடன் இணைந்து ஆரம்பத்தில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த ரச்சிதா மகாலட்சுமி அவரையே திருமணம் செய்துக் கொண்டார். சில வருட வாழ்க்கையிலேயே கணவரால் ஏகப்பட்ட கொடுமைகளை அனுபவித்தேன் என அவரை பிரிந்து விட்ட ரச்சிதா மகாலட்சுமி சீரியலில் இருந்து சினிமா பக்கம் தாவி பல படங்களில் நடித்து வருகிறார்.

பற்ற வைத்த ஃபயர் படம்: ஜெ. சதீஷ் குமார் இயக்கத்தில் வெளியான ஃபயர் திரைப்படம் அதில் நெகட்டிவ் ரோலில் நடித்த பாலாஜி முருகதாஸுக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்த நிலையில், பிக் பாஸ் பாலாவுடன் இணைந்து கவர்ச்சி பொங்க நடனமாடிய ரச்சிதா மகாலட்சுமிக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருகிறது.

புதிய படத்துக்கு பூஜை: வாழ்த்துக்கள் மக்களே என்னுடைய அடுத்த படம் ஆரம்பமாகிவிட்டது என தற்போது நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அள்ளி உள்ளது. சினிமாவில் தொடர்ந்து பல வாய்ப்புகள் மற்றும் வெற்றிகள் உங்களுக்கு குவியட்டும் என ரட்சிதாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

லாவண்டர் நிற சுடிதாரில்: ஸ்ரீ காவ்யா மூவீஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கான பூஜையில் லாவண்டர் நிற சுடிதார் அணிந்துக் கொண்டு ரச்சிதா மகாலட்சுமி பங்கேற்றுள்ள காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். மேலும், படத்தை பற்றிய மற்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X