ஹோம்லி லுக்கில் கலக்கும் ரச்சிதா மகாலட்சுமி.. சொக்கிப்போன ரசிகர்கள்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: சின்னத்திரை மூலம் ஃபேமஸ் ஆனவர் ரச்சிதா. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலம் ஆன அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனிலும் கலந்துகொண்டார். பிக்பாஸில் கிடைத்த புகழைவிடவும் ஃபயர் படத்தில் நடித்த பிறகு சென்சேஷனல் ஆகிவிட்டார் ரச்சிதா. இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய திரை கலைஞர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் கொண்டாடுவது வழகக்ம். அதனை பயன்படுத்தி பலர் வளந்திருப்பதும் இங்கு நடந்திருக்கிறது.

தமிழில் ரச்சிதா மகாலட்சுமி: அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமான ரச்சிதாவுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக தன்னுடைய கலரை மாற்றிக்கொண்டு நடித்தது பலரின் அப்ளாஸை அள்ளியது. அந்த சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடித்தார். அந்த சீரியல் ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது.

Actress Rachita has been involved in a few films Among them the recently released film Fire She appeared with utmost glamour in a song in that film
Photo Credit:

திருமணம் டூ விவாகரத்து: இந்த சூழலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. இப்போது அவர்கள் இரண்டு பேரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள். எப்படியாவது ரச்சிதாவுடன் சேர்ந்துவிட வேண்டும் என்று தினேஷ் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

பிக்பாஸ் ரச்சிதா: நிலைமை இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாண்ட அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார். அவர் வீட்டுக்குள் இருந்தபோது அவரிடம் ராபர்ட் மாஸ்டர் பேசிய விஷயங்கள் அனைத்துமே ட்ரெண்டாகின. மேலும் அவர்களை வைத்து பல மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகை ரச்சிதா சில படங்களில் கமிட்டானார். அவற்றில் அண்மையில் ஃபயர் திரைப்படம் வெளியானது. அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் உச்சக்கட்ட கிளாமரோடு தோன்றினார் அவர். அது பெரும் சர்ச்சையையும், வாக்குவாதத்தையும் கிளப்பியது. ஆனால் பணத்துக்காக தான் அவ்வாறு நடிக்கவில்லை என ரச்சிதா தனது விளக்கத்தையும் அளித்தார்.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: அடுத்ததாக அவர் எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் தனது புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் புடவை கட்டியபடி ஹோம்லி லுக்கில் இருக்கும் ஃபோட்டோஸை அவர் பகிர்ந்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அட கிளாமர், ஹோம்லி என அனைத்து லுக்குகளிலும் ரச்சிதா அழகாக இருக்கிறாரே என்று கூறி அவைகளை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X