கிளாமர் கூட வேண்டாம்.. ஓரக்கண்ணால் பார்த்தாலே பத்திக்குமே..ரசிகர்களை கட்டிப்போட்ட ரச்சிதா மகாலட்சுமி
சென்னை: சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இயற்கை சூழலில் மரங்களுக்கு நடுவே எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில், இளஞ்சிவப்பு நிற உடையில் ரச்சிதா மிகவும் அழகாகவும் எளிமையாகவும் போஸ் கொடுத்துள்ளார்.
நடிகை ரச்சிதா மகாலட்சுமி: இன்ஸ்டாகிராமில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களை வைத்து இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். தற்போது இவர் புதிய போட்டோக்கள் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோஸ் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் குவித்து வருகிறது. அந்த போட்டோவை பார்த்த ஃபேன்ஸ் எப்போதும் போல அழகு, நேச்சுரல் குயின் என ரச்சித்தாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

பிஸியான நடிகை: கர்நாடகாவில் பிறந்த ரச்சிதா மகாலட்சுமி, தமிழ் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். குறிப்பாக இவர் சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அதன்பின்னர் நாச்சியார்புரம், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில் வெற்றிகரமான பணத்தை தொடர்ந்து, ரச்சிதா திரைப்படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நடித்த உப்புக்கருவாடு, பயர் போன்ற படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றன. பயர் படம் வெளியான போது பலரும் ரச்சித்தாவா இப்படி நடித்து இருக்கிறார் என கேள்வி எழுந்த போதும், அந்த நெகட்டிவிட்டியே இவரை மேலும் பிரபலமாக்கியது.

க்யூட் போஸ்: அண்மையில் ரச்சிதா நடிக்கில் 99/66 என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர், மெய்நிகர், யு ஆர் நெக்ஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கிங் பிஸியாக இருந்த போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமியின் இந்த புதிய போட்டோஷூட் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications