சாராயம் விற்கும் ராதா!

By Staff


சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதா காத்தவராயன் படத்தில் சாராய வியாபாரி வேடத்தில் கலக்கலாக நடிக்கிறாராம்.

Click here for more images

கரண் நாயகனாக நடிக்கும் புதிய படம் காத்தவராயன். கடந்த வாரம்தான் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படு வேகமாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கரணுக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் வளர்ச்சிக் கன்னி விதிஷா ஜோடி போட்டுள்ளார்.

இப்படத்தில் ராதா 2வது நாயகியாக நடிக்கிறார். அடாவடி படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது. படத்தில் ராதாவுக்கு வில்லங்கமான வேடமாம். அதாவது சாராய வியாபாரியாக அசத்துகிறாராம் ராதா.

இதுகுறித்து அவர் கூறுகையில், மண்வாசனை படத்தில் பாண்டியன் மீது தீராக் காதல் கொண்டிருக்கும் ரேவதி போன்ற கேரக்டர் எனக்கு.

இப்படத்தில் நாயகன் கரணுக்காகவே நான் வாழ்கிறேன். சாராய வியாபாரியாக வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளேன். படத்தின் நாயகி நான் இல்லை என்பது முக்கியமல்ல. ஆனால் எனது கேரக்டர்தான் படத்தில் வெகுவாக பேசப்படும்.

சாராய வியாபாரியாக நடிக்க நான் தயங்கவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் பெண்கள் கள்ளச்சாராயம் விற்கிறார்கள், கஞ்சா விற்கிறார்கள்.

இப்படம் எனக்கு பெரும் திருப்புமுனையாக இருக்கும். சுந்தரா டிராவல்ஸ் படத்திற்குப் பிறகு எனக்கு பிரேக் கொடுக்கும் வகையிலான படம் கிடைக்கவில்லை. அந்தக் குறையை இந்தப் படம் தீர்த்து வைக்கும் என்றார் நம்பிக்கையுடன்.

கஞ்சா அழகியாக பிதாமகனில் சங்கீதா கலக்கினார். இப்போது கள்ளச்சாராய வியாபாரியாக அசத்தப் போகிறார் ராதா. சாராயமே ஒரு போதை, அதை அழகான பெண் அம்சமாக விற்றால் போதையோ போதைதான்.

படத்தில் வடிவேலுவுக்கு முக்கியமான கேரக்டராம். பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறாராம். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். சலங்கை துரை படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Read more about: kathavarayan sundara travels
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X