லாட்ஜில் அடைத்து வைத்து அடித்தார்கள்...' சுந்தரா டிராவல்ஸ்' ராதாவின் புதுப் புகார்

By Sudha

சென்னை: என்னை பைசூல் தரப்பு மகாபலிபுரத்திற்குக் கடத்திச் சென்று அங்கு லாட்ஜில் அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்தியதால்தான் நான் அவர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்தேன். ஆனால் நான் மனப்பூர்வமாக வாபஸ் பெறவில்லை. பைசூல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திடீரென ஒரு புதுப் புகாருடன் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளார் சுந்தரா டிராவல்ஸ் ராதா.

ராதாவின் புகார்கள், ஆரம்பத்திலிருந்தே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆரம்பத்தில் பைசூல் மீது சரமாரியாக புகார்களைக் கொடுத்தார்.

அவரை ஏன் கைது செய்யவி்ல்லை என்று போலீஸாரையே கண்டித்துப் பேட்டிகளும் கொடுத்தார். இந்த நிலையில் திடீரென புகாரைத் திரும்பப் பெறுவதாகவும், என்னதான் இருந்தாலும் பைசூல் எனது புருஷனாச்சே, சேர்ந்து வாழப் போகிறேன் என்று கூறி போலீஸாரை டென்ஷனாக்கினார். இந்த நிலையில் தற்போது பைசூல் மீது மீண்டும் ஒரு புகாருடன் திரும்பி வந்துள்ளார்.

சாலிகிராமம் ராதா.. திருவல்லிக்கேணி பைசூல்

சாலிகிராமம் ராதா.. திருவல்லிக்கேணி பைசூல்

சாலிகிராமத்தில் வசித்து வருகிறார் ராதா. இவரது கணவர் என்று ராதாவால் கூறப்படும் பைசூல் திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டமாகும். பைசூல் தொழிலிதிபர் என்று கூறப்படுகிறது.

குடும்பம் நடத்தினார்.. மோசடி செய்தார்

குடும்பம் நடத்தினார்.. மோசடி செய்தார்

பைசூல் மீ்து சில மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸில் புகார் கொடுத்தார் ராதா. அதில், பைசூல், தன்னோடு 6 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினார். தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். மேலும் என்னிடம் ரூ.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டார் என்று கூறியிருந்தார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இந்த விவகாரத்தை வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்து வந்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி கோர்ட்டை அணுகினார் பைசூல். ஆனால் 3 முறையும் அது நிராகரிக்கப்பட்டது. விசாரணைக்கும் அவர் வரவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் தேடி வந்தனர்.

போலீஸ் மீது பாய்ச்சல்

போலீஸ் மீது பாய்ச்சல்

ஆனால் பைசூலை ஏன் போலீஸார் கைது செய்யாமல் உள்ளனர். போலீஸ் அதிகாரிகள் பைசூலுக்கு ஆதரவாக உள்ளனர் என்று அடிக்கடி பேட்டி கொடுத்து காவல்துறையினருக்கே டென்ஷன் கொடுத்தார் ராதா.

திடீர் வாபஸ்

திடீர் வாபஸ்

இந்த நிலையில் நடிகை ராதா திடீரென்று, வடபழனி போலீஸ் நிலையத்திற்கு சென்று, தான் கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். மீண்டும் தனது கணவர் தொழில் அதிபர் பைசூலுடன் வாழப்போவதாக அறிவித்தார். இதனால் போலீஸார் பெரும் குழப்பமடைந்தனர். ராதா மீதே வழக்குத் தொடரலாமா என்பது குறித்து அவர்கள் ஆலோசித்து வந்ததாக செய்திகள் வெளியாகின.

புதுப் புகார்

புதுப் புகார்

இந்த நிலையில், நேற்று ராதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புதிய புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அடைத்து வைத்து அடித்தனர்

அடைத்து வைத்து அடித்தனர்

அந்த மனுவில், பைசூல் மீது கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெறவில்லை என்றும், தன்னை கடத்திச்சென்று, மகாபலிபுரத்தில் ஒரு லாட்ஜில் சிறை வைத்து அடித்து துன்புறுத்தி, மிரட்டியதால் புகாரை வாபஸ் பெற்றேன் என்றும், பைசூல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

என்னய்யா பண்றது...

என்னய்யா பண்றது...

ராதாவின் குழப்பகரமான செயல்களால் ஏற்கனவே டென்ஷனாக உள்ள போலீஸார், தற்போது ராதா கொடுத்துள்ள புதிய புகார் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று குழம்பிப் போயுள்ளனராம். உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று அவர்கள் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X