ராதா வீசும் வலை திருமணத்திற்குப் பின் குடும்பம் குட்டிகளோடு செட்டிலான நடிகை ராதா மீண்டும் கோலிவுட்டில் சான்ஸ் தேட ஆரம்பித்துவிட்டார். தனது திரையுலக மறு பிரவேசத்தை மகளுடன் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனம் ஆடி துவக்கியுள்ளார். கோலிவுட்டைக் கலக்கிய கேரளத்தைச் சேர்ந்த படு விவரமான சேச்சிகள் பட்டியலில் அம்பிகா-ராதாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இதில் அம்பிகா கல்யாணம், கணவரை விட்டுப் பிரிவு, டிவி நடிகருடன் கொஞ்ச நாள் சுத்து, மதுரை வெடி நடிகருடன் சுத்து என ரவுண்ட் அடித்துவிட்டு இப்போது கிடைக்கிற சான்ஸை பயன்படுத்தி சினிமாவில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். ராதாவோ அம்பிகாவிடம் இருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டவராக இருக்கிறார். தனது ஊரைச் சேர்ந்த உறவினரான ராஜசேகரன் நாயர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்போது அவருக்கு 3 குழந்தைகள். செட்டில் ஆன நடிகைகளுக்கே உரிய வகையில் உடம்பு வைத்துவிட்டது. ஆனாலும் வசீகரமாகத்தான் இருக்கிறார் ராதா. கேரளாவிலும் மும்பையிலும் உதய சமுத்ரிகா என்ற ஹோட்டல்களை நடத்திக் கொண்டே மூத்த மகள் கார்த்திகாவுடன் சேர்ந்து நரேஷ்குமார் என்ற மாஸ்டரிடம் பரத நாட்டிய கிளாஸ் போய் வரும் ராதா, சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரங்கேற்றம் நடத்தினார். அத்தோடு கோலிவுட்டுக்கும் தூது அனுப்ப ஆரம்பத்துவிட்டார். இப்போதைக்கு ராதா மட்டுமே நடிக்கப் போகிறாராம். தொடர்ந்து தனது மகள் கார்த்திகாவையும் சினிமாவுக்குக் கொண்டு வரத் திட்டமாம். இப்போது கார்த்திகாவுக்கு 13 வயது தானாம். கார்த்திகா தவிர ராதாவுக்கு விக்னேஷ், துளசி இன்னொரு மகன், மகளும் இருக்கிறார்கள். இப்போதைக்கு அம்மா, அக்கா, மாமியார், அத்தை, பக்கத்து வீட்டு ஆண்டி என்று எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்க ராதா தயாராக இருக்கிறாராம். பாரதிராஜா சினிமா என்ற பெயரில் இந்தி, தமிழில் இரு மொழி படத்தை இயக்க பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக சமீபத்தில் மும்பை போன பாரதிராஜாவை ராதா தேடிப் போய் பார்த்தாராம். அப்படியே அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ராதாவும் கார்த்திகாவும் பரதநாட்டியம் ஆடிக் காட்டினார்களாம்.அப்போது பாரதிராஜா, இன்னும் உன்கிட்ட திறமை அப்படியே இருக்கு. சீக்கிரம் திரும்ப சினிமாவுக்கு வந்துருஎன்று அட்வைஸ் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்.இதையடுத்து தனது சினிமா கனவுக்கு மீண்டும் பேட்டரி போட்டு சார்ஜ் செய்திருக்கிறார் ராதா.கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக அம்பிகாவும் ராதாவும் அதிமுக பார்டர் கட்டியசேலையில் ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இம்முறை அப்படியேதும் திட்டம் ராதாவிடம்இல்லையாம். (அம்பிகா பிரச்சாரத்துக்கு ரெடி தான் என்றாலும் போயஸ் கார்டன் கூப்பிடவில்லையாம்) பிட்: ராதாவின் ஒரிஜினல் பெயர் தெரியுமோ? உதய சந்திரிகா. தனது ரா செண்டிமெண்ட்படி இவரை ராதாவாக்கினார் இயக்குனர் பாரதிராஜா, அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக. பிட்..ட்: ராதாவின் முதல் ஹீரோவான கார்த்திக்கின் மகன் கெளதமை நாயகனாக்கி 365 காதல் கடிதங்கள் என்ற படத்தை எடுக்க இருக்கிறார்களாம். ப்ரியம் என்ற படத்தை இயக்கிய பாண்டியன் தான் இதன் டைரக்டர். இதில் ராதாவின் மகள் கார்ததிகாவை ஹீரோயினாக்கவும் முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். ஆல் த பெஸ்ட்...

By Staff

திருமணத்திற்குப் பின் குடும்பம் குட்டிகளோடு செட்டிலான நடிகை ராதா மீண்டும் கோலிவுட்டில் சான்ஸ் தேட ஆரம்பித்துவிட்டார்.

தனது திரையுலக மறு பிரவேசத்தை மகளுடன் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனம் ஆடி துவக்கியுள்ளார்.


கோலிவுட்டைக் கலக்கிய கேரளத்தைச் சேர்ந்த படு விவரமான சேச்சிகள் பட்டியலில் அம்பிகா-ராதாவுக்கு முக்கியமான இடம் உண்டு.

இதில் அம்பிகா கல்யாணம், கணவரை விட்டுப் பிரிவு, டிவி நடிகருடன் கொஞ்ச நாள் சுத்து, மதுரை வெடி நடிகருடன் சுத்து என ரவுண்ட் அடித்துவிட்டு இப்போது கிடைக்கிற சான்ஸை பயன்படுத்தி சினிமாவில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார்.

ராதாவோ அம்பிகாவிடம் இருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டவராக இருக்கிறார். தனது ஊரைச் சேர்ந்த உறவினரான ராஜசேகரன் நாயர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்போது அவருக்கு 3 குழந்தைகள்.

செட்டில் ஆன நடிகைகளுக்கே உரிய வகையில் உடம்பு வைத்துவிட்டது. ஆனாலும் வசீகரமாகத்தான் இருக்கிறார் ராதா.

கேரளாவிலும் மும்பையிலும் உதய சமுத்ரிகா என்ற ஹோட்டல்களை நடத்திக் கொண்டே மூத்த மகள் கார்த்திகாவுடன் சேர்ந்து நரேஷ்குமார் என்ற மாஸ்டரிடம் பரத நாட்டிய கிளாஸ் போய் வரும் ராதா, சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரங்கேற்றம் நடத்தினார்.

அத்தோடு கோலிவுட்டுக்கும் தூது அனுப்ப ஆரம்பத்துவிட்டார். இப்போதைக்கு ராதா மட்டுமே நடிக்கப் போகிறாராம். தொடர்ந்து தனது மகள் கார்த்திகாவையும் சினிமாவுக்குக் கொண்டு வரத் திட்டமாம்.


இப்போது கார்த்திகாவுக்கு 13 வயது தானாம். கார்த்திகா தவிர ராதாவுக்கு விக்னேஷ், துளசி இன்னொரு மகன், மகளும் இருக்கிறார்கள்.

இப்போதைக்கு அம்மா, அக்கா, மாமியார், அத்தை, பக்கத்து வீட்டு ஆண்டி என்று எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்க ராதா தயாராக இருக்கிறாராம்.

பாரதிராஜா சினிமா என்ற பெயரில் இந்தி, தமிழில் இரு மொழி படத்தை இயக்க பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக சமீபத்தில் மும்பை போன பாரதிராஜாவை ராதா தேடிப் போய் பார்த்தாராம். அப்படியே அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ராதாவும் கார்த்திகாவும் பரதநாட்டியம் ஆடிக் காட்டினார்களாம்.

அப்போது பாரதிராஜா, இன்னும் உன்கிட்ட திறமை அப்படியே இருக்கு. சீக்கிரம் திரும்ப சினிமாவுக்கு வந்துருஎன்று அட்வைஸ் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்.

இதையடுத்து தனது சினிமா கனவுக்கு மீண்டும் பேட்டரி போட்டு சார்ஜ் செய்திருக்கிறார் ராதா.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக அம்பிகாவும் ராதாவும் அதிமுக பார்டர் கட்டியசேலையில் ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இம்முறை அப்படியேதும் திட்டம் ராதாவிடம்இல்லையாம். (அம்பிகா பிரச்சாரத்துக்கு ரெடி தான் என்றாலும் போயஸ் கார்டன் கூப்பிடவில்லையாம்)

பிட்:

ராதாவின் ஒரிஜினல் பெயர் தெரியுமோ?


உதய சந்திரிகா. தனது ரா செண்டிமெண்ட்படி இவரை ராதாவாக்கினார் இயக்குனர் பாரதிராஜா, அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக.

பிட்..ட்:

ராதாவின் முதல் ஹீரோவான கார்த்திக்கின் மகன் கெளதமை நாயகனாக்கி 365 காதல் கடிதங்கள் என்ற படத்தை எடுக்க இருக்கிறார்களாம். ப்ரியம் என்ற படத்தை இயக்கிய பாண்டியன் தான் இதன் டைரக்டர். இதில் ராதாவின் மகள் கார்ததிகாவை ஹீரோயினாக்கவும் முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள்.

ஆல் த பெஸ்ட்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X