»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

"சுந்தரா டிராவல்ஸ்" ராதா இப்போது சிங்கிள் டான்ஸுக்காக வாய்ப்பு கேட்டு படிப் படியாக ஏறி, இறங்கி வருகிறார்.

முரளியுடன் சேர்ந்து "சுந்தரா டிராவல்ஸ்" படத்தில் நடித்தவர் ராதா. இந்தப் படத்தில் வடிவேலு அடித்த காமெடி கலாட்டாவில் முரளியேகாணாமல் போயிருந்த நிலையில் ராதாவை யாராவது ஞாபகம் வைத்திருப்பார்களா?

மலையாளக் கரையோரத்தில் இருந்து தமிழுக்கு வந்த இந்த ராதாவும் "அலைகள் ஓய்வதில்லை" ராதாவைப் போலவருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். நன்றாகத் தான் நடித்தார். ஆனால், வந்த ஒரு படத்திலேயே காணாமல்போய்விட்டார்.

நன்றாக நடித்தாலோ, ஹீரோயின் கருப்பாக இருந்தாலே தான் தமிழ் சினிமாவில் இடம் கிடைக்காதே!.கிரண்களுக்கு மத்தியில் தாக்குப் பிடிப்பது அவ்வளவு ஈசியா என்ன?

சுந்தரா டிராவல்ஸ்க்குப் பின் பட வாய்ப்புகள் முற்றிலும் இல்லாத நிலையில் இருந்த ராதாவுக்கு, முரளி புது வாழ்வுகொடுக்க முன் வந்துள்ளார்.

தான் நடிக்கும் "ஒளி" படத்தில் சிங்கிள் டான்ஸுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக ராதாவுக்கு உறுதிகூறியிருக்கிறாராம் முரளி.

இதனால் முரளி மீது ராதாவுக்கு அலாதிப் பிரியம் வந்து விட்டதாம். அவர்தான் எனக்கு குரு என்று கண்ணில்பட்டவர்களையெல்லாம் கூப்பிட்டுக் கூறிக் கொண்டிருக்கிறார் ராதா.

இனிமேல் சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆடியே மார்க்கெட்டைப் பிடிப்பேன் என்று மார் தட்டிக் கூறி வருகிறார்ராதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil