Karthika Nair-காதல் தேசத்தில் கார்த்திகா நாயர்..ஹனிமூன் எங்க போனாங்க தெரியுமா?.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சென்னை: Karthika Nair (கார்த்திகா நாயர்) ராதாவின் மகள் கார்த்திகா நாயர் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ராதா. 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டவர்.

ராதாவின் மகள்கள்: ராதாவுக்கு கார்த்திகா, துளசி என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தாயின் வழியில் இரண்டு பேருமே நடிகையாக வலம் வந்தார்கள். கார்த்திகா கோ படத்தின் மூலமும் துளசி கடல் படத்தின் மூலமும் அறிமுகமானார்கள். தாயை போலவே மகள்கள் இரண்டு பேருமே சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் படம் ஹிட்: குறிப்பாக கார்த்திகா அறிமுகமான கோ படம் மெகா ஹிட்டானது. அதில் அவரது நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படிதான் இருந்தது. அந்தப் படத்துக்கு அன்னக்கொடி படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை. துளசியும் கடல் படத்துக்கு பிறகு யான் படத்தில் நடித்தார். அவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தொழிலில் கவனம்: சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சுதாரித்துக்கொண்ட கார்த்திகா தனது தாய் மற்றும் தந்தையின் தொழில்களை கவனிக்க ஆரம்பித்தார். ராதா பல ஹோட்டல் பிஸ்னெஸ்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களை செய்துவருகிறார். அந்த தொழில் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்து முழுமூச்சாக அதில் ஈடுபட்டுவந்தார் கார்த்திகா. துளசியும் அவருக்கு பக்க பலமாக இருந்தார்.
திருமணம்: சூழல் இப்படி இருக்க கார்த்திகாவுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. ரோஹித் மேனன் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். படு பிரமாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமணம் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் வாய் பிளக்க வைத்தது. ஏனெனில் கிலோ கணக்கில் கார்த்திகாவுக்கு ராதா நகை போட்டு கட்டிக்கொடுத்தார்.
ஹனிமூன்: பிரமாண்ட திருமணத்தை முடித்த கார்த்திகாவும் ரோஹித்தும் தற்போது ஹனிமூனில் இருக்கிறார்கள். காதலர்களின் கனவு தேசம் என்று வர்ணிக்கப்படும் பாரிஸில் அவர்கள் தங்களது ஹனிமூனை கழித்து வருகிறார்கள். அங்கு இருக்கும் ஈஃபிள் டவர் உள்ளிட்ட பகுதிகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கார்த்திகா நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன. அதனை பார்த்த ரசிகர்கள் இதே மகிழ்ச்சி வாழ்க்கை முழுவதும் நீடிக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











