ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. ஜப்பான் மவுன்ட் ஃபியூஜியில் கணவருடன் செம ரொமான்ஸ் செய்யும் ராதிகா!

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நெப்போலியன் மகன் திருமணத்துக்காக ஜப்பான் சென்ற நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் அங்கே மீனா மற்றும் குஷ்புவுடன் சுற்றுலா செய்துள்ளனர். அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா சரத்குமார் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

தனது கணவர் சரத்குமாரின் மூத்த மனைவி சாயா தேவியின் மகள் வரலட்சுமி சரத்குமார் திருமணத்தை சித்தி ராதிகா முன்னின்று நடத்தி வைத்தார். தீபாவளியை முன்னிட்டு தல தீபாவளி நிகழ்ச்சியும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

napolean radhika sarathkumar meena

வரலட்சுமி சரத்குமாரின் தல தீபாவளியை தொடர்ந்து தனது கணவருடன் இணைந்துக் கொண்டு நெப்போலியன் அழைப்பை ஏற்று ஜப்பானுக்கே கிளம்பி சென்றுள்ளார் ராதிகா சரத்குமார்.

ஜப்பானில் ராதிகா: சினிமா படப்பிடிப்புக்காக பல நாடுகளுக்கு சென்றுள்ள ராதிகா சரத்குமார் நெப்போலியன் மகன் திருமணத்துக்காக தற்போது ஜப்பானுக்கு தனது கணவர் சரத்குமாருடன் சென்றுள்ளார். சரத்குமார் வருகையை அறிந்து அவரை விமான நிலையத்திற்கே சென்று நெப்போலியன் வரவேற்ற காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு அதற்கு மீசைக்கார நண்பா பாடலையும் சரத்குமார் போட்டிருந்தார். சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் ஜப்பானுக்கு திருமணத்துக்காக சென்ற நிலையிலும், அங்கே சுத்தி பார்க்கவும் அவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் நெப்போலியன் செய்துக் கொடுத்துள்ளார்.

napolean radhika sarathkumar meena

மவுண்ட் ஃபியூஜி: உலகளவில் பிரசித்தி பெற்ற மவுண்ட் ஃபியூஜி மலைக்கு ராதிகா மற்றும் சரத்குமார் சுற்றுலா சென்ற நிலையில், அங்கே அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ளார். வரலட்சுமி சரத்குமார் திருமணமும் சென்னையில் நடக்காமல் தாய்லாந்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவருடைய திருமண பிசியில் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் சுற்றுலா செய்ய முடியாமல் இருந்த நிலையில், தற்போது நிம்மதியாக நெப்போலியன் மகன் திருமணத்தையும் ஜப்பானையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.

napolean radhika sarathkumar meena

மீனாவும் குஷ்புவும்: நடிகைகள் மீனா மற்றும் குஷ்புவும் ஜப்பானுக்கு நெப்போலியன் மகன் திருமணத்துக்காக சென்றுள்ளனர். கணவர் சரத்குமாருடன் எடுத்த போட்டோக்களை வெளியிட்ட ராதிகா சரத்குமார் தங்களுடன் மீனா மற்றும் குஷ்புவும் ஜப்பானில் சுற்றுலா செய்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். இப்படியெல்லாம் இந்த காலத்து நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஒரே குடும்பமாக நட்பாக இருப்பார்களா? என்பது அரிதான விஷயம் தான் எனக் கூறுகின்றனர். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் போல ஜப்பானில் நெப்போலியன் மகன் திருமணத்தையும் முடித்து விட்டு சினிமா பிரபலங்கள் ஜப்பானை சுற்றியும் பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X