நடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே
Recommended Video

மும்பை: நடிக்க வந்த புதிதில் பணத்திற்காக சில அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டியதாகிவிட்டது என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
பாலிவுட் படம் மூலம் நடிகையானவர் ராதிகா ஆப்தே. அவர் தற்போது இந்தி, தமிழ், மராத்தி, பெங்காளி, ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். டோலிவுட் சென்ற அவர் இனி தெலுங்கு படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டார்.
கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்து அசத்தினார் ராதிகா.

13 ஆண்டுகள்
சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்தவர் ராதிகா ஆப்தே. அவர் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் நடிக்க வந்த புதிதில் பணத்திற்காக தான் செய்த காரியங்கள் பற்றி அவர் பேசியுள்ளார்.

பணம்
நான் நடிக்க வந்த புதிதில் விருப்பமே இல்லாத பல படங்களில் நடித்தேன். பணம் வேண்டும் என்பதால் பிடிக்காத படங்களில் கூட நடிக்க வேண்டியதாகிவிட்டது என்கிறார் ராதிகா ஆப்தே.

பட வாய்ப்புகள்
தற்போது எனக்கு பிடித்த படங்களை தேர்வு செய்து நடிக்கும் இடத்தில் உள்ளேன். எதையுமே ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்ற வேண்டும் என்று ராதிகா தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
ராதிகா ஆப்தே மேலாடையில்லாமல் படுக்கையறை காட்சிகளில் நடித்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் அவரோ கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறு இல்லை என்று கூலாக விளக்கம் அளித்தார்.

படுக்கை
பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்து வருகிறார் ராதிகா. பாலிவுட் படத்தில் நடிக்க தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாகவும் ராதிகா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











