கபாலி பட நடிகையை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.. அதென்ன டயர் மாதிரி இருக்கு!

மும்பை: இந்தியாவில் பெரும்பாலான மொழித் திரைப்படங்களில் நடித்து கால் தடத்தைப் பதித்த நடிகை ராதிகா ஆப்தே இப்போது ஆங்கில திரைப்படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

தமிழில் சமீபத்தில் வெளியான சித்திரம் பேசுதடி 2ல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த ராதிகா ஆப்தே இப்பொழுது நேரடி பிரஞ்ச் திரைப்படத்தில் நடிக்க உள்ளதால் பிரெஞ்சு மொழியையும் முறையாக கற்று வருகிறார்.

இவ்வாறு உலக அளவில் பல மொழிகளில் கலக்கி வரும் ராதிகா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வித்தியாசமான புகைப்படம் நெட்டிசன்களால் பங்கமாக கலக்கப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக

ரஜினிகாந்துக்கு ஜோடியாக

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி போட இளம் கதாநாயகிகள் பலரும் முண்டியடித்து வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்திய தோடு நடிப்பிலும் தூள் கிளப்பி இருப்பார்.

கபாலி

கபாலி

கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ராதிகா ஆப்தே இதற்கு முன் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்திருப்பார். அதே சமயம் ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சர்ச்சை திரைப்படங்களில் மாட்டுவதும் சகஜமான ஒன்றாகும்.

ஆங்கில திரைப்படங்களிலும்

ஆங்கில திரைப்படங்களிலும்

பர்சீட், லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட அடல்ட் கன்டட் திரைப்படங்களில் நடித்து அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்த ராதிகா ஏற்கனவே ஹிந்தி மராத்தி பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல இந்திய மொழிகளில் நடித்து உள்ள நிலையில் இப்பொழுது கைநிறைய ஆங்கில திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பிரெஞ்சு மொழி

பிரெஞ்சு மொழி

அந்த வகையில் பிரெஞ்சு மொழியில் உருவாகி வரும் "எ கால் டு ஸ்பை " என்ற திரைப்படத்திற்காக பிரத்தியோகமாக பிரெஞ்சு மொழியை கற்று வரும் ராதிகா ஆப்தே இந்திய ரசிகர்களைப் போல மிக விரைவிலேயே பிரெஞ்சு ரசிகர்களையும் கவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான புகைப்படம்

வித்தியாசமான புகைப்படம்

இவர் சமூகவலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது கறுப்பு நிற ஸ்கர்ட்டை அணிந்து கொண்டு முன்னழகு தெரிய ஒய்யாரமாக நின்றவாறு போஸ் கொடுத்திருக்கும் ராதிகா ஆப்தேவின் இந்த வித்தியாசமான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இது என்ன டிரெஸ் என்றும், இது என்ன டயர மாட்டி இருக்கீங்க என்றும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X