ஒருவருடன் மட்டும் 'அது' என்பதில் நம்பிக்கையில்லை.. திருமணமான பிரபல நடிகையின் தில் பேச்சு!
Recommended Video
மும்பை: ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என நடிகை ராதிகா ஆப்தே பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகை ராதிகா ஆப்தே இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிசெல்வன், தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ரஜினியுடன் கபாலி படத்தில் ஜோடி போட்டதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் ராதிகா ஆப்தே. பாலிவுட்டை பொறுத்தவரை பல முன்னணி நடிகைகள் தயங்கும் கேரக்டர்களையும் அசால்ட்டாக செய்துவருகிறார்.

தாராளம் காட்டும் நடிகை
அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பீக்கில் இருந்து வருகிறார் ராதிகா ஆப்தே. சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரங்களை கையாள்வதிலும் கவர்ச்சிக் காட்டுவதிலும் தாராளம் காட்டி வருபவர் ராதிகா ஆப்தே.

அது கட்டாயம் இல்லை
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ராதிகா ஆப்தே ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார். தினமும் ஒவ்வொருவருடன் இருப்பது என்பது தினமும் மாறக் கூடிய விஷயம் என்ற அவர் அது கட்டாயமாக இருக்க வேண்டிய விஷயம் இல்லை என்றார்.

பலரை காதலிக்க விரும்புகிறேன்
மேலும் அப்படிப்பட்ட வாய்ப்பு ஒவ்வொரு நாளும் தனக்கு தேவைப்படுகிறது என்றும் நடிகை ராதிகா ஆப்தே படு துணிச்சலாக பேசியுள்ளார். பலருடன் காதல் கொள்வதில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பலரை காதலித்திருக்கிறேன்
ஒரே நேரத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் பலரை தான் காதலித்திருப்பதாகவும் கூறியுள்ளார் ராதிகா ஆப்தே. நடனம், நடிப்பு போன்றவற்றை எப்படி காதலிக்கிறேனோ அதுபோல் தான் காதலும் என்றும் கூறியுள்ளார் அவர்.

ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை ராதிகா ஆப்தே, பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்துள்ளார். கட்டிய கணவர் குத்துக்கல்லாட்டம் இருக்கும் போதே தனக்கு இப்போதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் இருக்க வேண்டும் என ராதிகா ஆப்தே கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











