»   »  ரூ. 90க்கு விற்பனையாகும் ராதிகா ஆப்தேவின் ஆபாச பட டிவிடி

ரூ. 90க்கு விற்பனையாகும் ராதிகா ஆப்தேவின் ஆபாச பட டிவிடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராதிகா ஆப்தேவின் பார்ச்ட் படத்தில் வரும் நிர்வாண காட்சிகள் ஆபாச படம் என்று கூறி ரூ.90க்கு டிவிடிகளாக விற்பனையாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் லீனா யாதவ் இயக்கத்தில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பார்ச்ட். வெளிநாட்டில் வெளியாகி சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது.

இந்நிலையில் பார்ச்ட் படம் வரும் 28ம் தேதி இந்தியாவில் ரிலீஸாகிறது.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் வரும் நிர்வாண படுக்கையறை காட்சிகள் இணையதளங்களில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. காட்சிகள் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆபாச டிவிடி

ஆபாச டிவிடி

ராதிகா, ஹுசைன் வரும் நிர்வாண காட்சிகள் தற்போது ஆபாச படமாக ரூ.90க்கு கொல்கத்தா சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இது குறித்து அஜய் தேவ்கன் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளாராம்.

விளம்பரம்

விளம்பரம்

இணையதளத்தில் ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சிகளை விளம்பரத்திற்காக தாங்கள் கசியவிடவில்லை என்று பார்ச்ட் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த ஆபாச டிவிடி விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபாசம் இல்லை

ஆபாசம் இல்லை

பார்ச்ட் படத்தில் வரும் படுக்கையறை காட்சிகள் உணர்ச்சியை தூண்டும் வகையிலோ, ஆபாசமாகவோ இல்லை. அது கலைநயத்துடன் எடுக்கப்பட்டுள்ளது என்கிறது படக்குழு.

English summary
Radhika Apte's Parched nude scenes are getting sold as porn video in the market for Rs. 90.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil