»   »  ராதிகா ஆப்தே நிர்வாண வீடியோ லீக் ஆனது எப்படி? - மும்பை போலீசில் புகார்

ராதிகா ஆப்தே நிர்வாண வீடியோ லீக் ஆனது எப்படி? - மும்பை போலீசில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராதிகா ஆப்தேயின் நிர்வாண வீடியோ வெளியான விவகாரம் குறித்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.

தமிழில் ‘தோனி' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட 7 மொழிகளில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ராதிகா ஆப்தேயின் நிர்வாணப் படங்கள் இணையத்திலும், வாட்ஸ் அப்பிலும் வெளியாயின. அந்தப் படங்கள் போலியானவை, ஏன் இப்படி சிலர் நடிகைகளை இழிவுப்படுத்துகிறார்கள் என ஆவேசப்பட்டார் ராதிகா ஆப்தே.

ஹாலிவுட்டில்

ஹாலிவுட்டில்

தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ள ராதிகா ஆப்தே தனது முதல் படத்தில் ஒரு காட்சியில் தற்போது அவரே விரும்பி நிர்வாணமாக நடித்துள்ளார். இதனை அவரும் ஒப்புக் கொண்டார்.

குறும்படம்

குறும்படம்

நிர்வாண செல்பியால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு ராதிகா ஆப்தே மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப்பின் குறும்படத்தில் நடித்துள்ளார். அந்த குறும்படத்தில் அவர் நிர்வாணமாக வரும் காட்சி சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

நிர்வாணம்

நிர்வாணம்

20 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படம் இன்னும் ரிலீஸாகவில்லை. சர்வதேச மார்க்கெட்டில் மட்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அந்த குறும்படத்தில் இருந்து ஒரு காட்சி கசிந்துள்ளது. அதில் ராதிகா ஆப்தே ஒரு ஆணின் முன் தன்னை நிர்வாணப்படுத்திக் கொள்வது போன்ற காட்சி உள்ளது.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இந்த காட்சி கசிந்துள்ளதை பார்த்து இயக்குனர் அனுராக் கஷ்யப் கோபமும், அதிர்ச்சியும் அடைந்தார். உடனே இது குறித்து அவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வீடியோவை கசியவிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யணும்

கைது செய்யணும்

இப்படி ஒரு வீடியோ கசிந்துள்ளது குறித்து கேட்டதற்கு, அந்த வீடியோவை வெளியிட்ட நபரை கைது செய்யும் வரை இது குறித்து நான் எதுவும் கூற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Radhika Apte's nude video goes viral online and the actress and director Anurag Kashyap have shocked over the video leak.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil