சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா: இப்படியா பேசுவது?

By Siva

மும்பை: ராதிகா ஆப்தே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளார்.

தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே லிபர்டி: எ கால் டு ஸ்பை என்கிற ஹாலிவுட் படத்தில் உளவாளியாக நடிக்கிறார். அவர் கதாபாத்திரத்தின் பெயர் நூர் இனாயத் கான். உளவாளியாக இருக்கும் இந்திய இளவரசியாக நடிக்க நிறைய பயிற்சி மேற்கொண்டுள்ளார் ராதிகா ஆப்தே.

இந்த படத்தை லிடியா டீன் பில்சர் இயக்குகிறார். இதற்கு முன்பு ராதிகா ஆப்தே ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹாலிவுட் படம் பற்றி ராதிகா பேட்டி அளித்துள்ளார்.

பாலிவுட்

பாலிவுட்

படம் இயக்குவதில் ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இடையே என்ன வித்தியாசம் என்றால் இங்கு மக்கள் நேரத்தை சரியாக பின்பற்றுகிறார்கள், மேலும் சரியான நேரத்திற்கு சம்பளத்தை கொடுத்துவிடுகிறார்கள். அதனால் சம்பள பணத்தை கொடுக்குமாறு யாரிடமும் பிச்சை எடுக்கத் தேவையில்லை என்றார் ராதிகா ஆப்தே.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

ராதிகா ஹாலிவுட்காரர்களை புகழ்ந்து இந்திய திரையுலகினரை தாக்கிப் பேசியது பலருக்கும் பிடிக்கவில்லை. பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறிய வேகத்தில் இப்படி பேசியுள்ளார் ராதிகா.

இயக்குநர்கள்

இயக்குநர்கள்

ஏற்கனவே ராதிகாவுக்கு வாய் துடுக்கு அதிகம் என்று பேச்சு உள்ள நிலையில் இந்திய திரையுலகம் பற்றி இப்படி சொல்லிவிட்டார் அவர். தெலுங்கு படத்தில் நடித்தபோது ஏற்பட்ட மோசமான அனுபவத்தை அடுத்து இனி அக்கட தேசத்து படங்களில் நடிக்கவே மாட்டேன் என்றார். அதில் இருந்தே அவரை தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வைக்க யோசிக்கிறார்கள்.

இந்தி படங்கள்

இந்தி படங்கள்

பாலிவுட்டிலும் ராதிகா ஆப்தே மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் நல்ல கதாபாத்திரங்கள் அவரை தேடி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் ராதிகா அளித்த பேட்டி அங்குள்ள ஜாம்பவான்களை கோபம் அடைய வைத்துள்ளது. முன்னதாக ராதிகா ஆப்தே தேவ் பட்டேலுடன் சேர்ந்து நடித்த தி வெட்டிங் கெஸ்ட் ஹாலிவுட் படத்தின் படுக்கையறை காட்சி கசிந்து வைரலானது. அதை பார்த்த ராதிகாவோ, அது என்ன அந்த செக்ஸ் காட்சியை என் பெயரில் ஷேர் செய்கிறீர்கள், தேவ் பட்டேல் பெயரில் செய்ய வேண்டியது தானே என்று கூலாக கேள்வி எழுப்பியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X