கணவர் மனைவிக்கு இடையே மூன்றாவது நபர் வரக்கூடாது..ராதிகா ஆப்தே அட்வைஸ்!

சென்னை : கணவர் மனைவிக்கு இடையே மூன்றாவது நபர் வரக்கூடாது என ராதிகா ஆப்தே அறிவுரை கூறியுள்ளார்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ராதிகா ஆப்தே. வா லைஃப் ஹோ டோ எய்ஸி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து பெங்காலி, மராத்தி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராதிகா ஆப்தே அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

தமிழில் தோனி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை ராதிகா ஆப்தே. தொடர்ந்து கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் ஃபிளாஷ் பேக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து வெற்றி செல்வன் படத்தில் நடித்த ராதிகா ஆப்தே, ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் ராதிகா ஆப்தே. இதன் மூலம் பெரும் பிரபலமானார்.

பல படங்களில்

பல படங்களில்

கடைசியாக தமிழில் சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தொடர்ந்து இந்தி இங்கிலிஷ் என பிஸியாக உள்ளார் ராதிகா ஆப்தே. எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நடித்து கொடுப்பதால் இயக்குநர்களின் முதல் சாய்ஸாக இருந்து வருகிறார் ராதிகா ஆப்தே. இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட விக்ரம் வேதா படத்தில், தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இப்படம் இந்தியில், வசூலை வாரிக்குவித்தது.

மூன்றாவது நபரை அனுமதிக்காதீர்

மூன்றாவது நபரை அனுமதிக்காதீர்

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ராதிகா ஆப்தே, நானும் எனது கணவர் பெனடிக்ட்டும் எங்களுக்கு பிடித்த வாழ்க்கையை, ரசித்து வாழ்ந்து வருகிறோம், கணவன், மனைவியோ...காதலன், காதலியோ இருவருக்கும் இடையே சண்டையோ, மன கசப்போ எது என்றாலும் அவர்களாகவே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். மூன்றாவது நபரிடம் ஆலோசனை கேட்காதீர்கள்.

தீர்த்து வைக்க முடியாது

தீர்த்து வைக்க முடியாது

எம்போது நம் உறவுக்கு இடையில் மூன்றாம் நபர் நுழைகிறாரோ அப்போதே உங்கள் உறவில் விரிசல் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம். நம் கணவரை நம்மை விட யாரும் நன்றாக புரிந்து இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது நமது வாழ்க்கையில் நமது பிரச்னையை எப்படி மற்றவர்களால் இப்படி தீர்த்து வைக்கமுடியும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X