'நீங்களே அநியாயத்துக்கு அழகு... இதுல அதெல்லாம் ஒரு விஷயமா?' ராதிகா ஆப்தேவிடம் கேட்கும் ரசிகர்கள்

By

Recommended Video

Radhika Apte in Galamourous Look | IEMMYS Awards | Sacred Games

மும்பை: நீங்கள் அநியாயத்துக்கு அழகு என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தேவை ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர். அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில், டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உட்பட சில படங்களில் நடித்தவர், பிரபல இந்தி நடிகை ராதிகா ஆப்தே.

பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அதிகம் அறியப்பட்டார்.

தென்னிந்திய இயக்குனர்

தென்னிந்திய இயக்குனர்

இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், வெப் சீரிஸ்களில் படுக்கை அறை காட்சிகளில் மிகவும் துணிச்சலாக நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் ராதிகா ஆப்தே. அவர் கூறும்போது 'தென்னிந்திய இயக்குனர் ஒருவர், மும்பையில் தங்கியிருந்தார்.

ஆபாசமாக நடிக்க

ஆபாசமாக நடிக்க

புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக என்னை அழைத்திருந்தார். சென்றேன். கவர்ச்சியாக போஸ் கொடுக்கச் சொன்னார். ஆபாசமாக நடிக்க சொன்னார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் அங்கிருந்து தப்பி வந்தேன் என்று கூறியிருந்தார். இது பரபரப்பானது. அந்த இயக்குனர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எதையும் வெளிப்படையாக பேசுபவர் ராதிகா ஆப்தே.

அதுபோல நடிக்க

அதுபோல நடிக்க

'ஒரு படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தால் அதே போல நடிக்கவே அதிக அழைப்பு வருகிறது' என்றும் அவர் குறை கூறியிருந்தார். இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

இன்னும் வளர்க்கணுமா?

நீச்சல்குளத்தில் தொடைகள் தெரிய அமர்ந்திருக்கும் அவர், கூலிங் கிளாஸ் அணிந்தபடி ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். தனது நீண்ட கூந்தலை ஒருபக்கமாகத் தொங்க விட்டுள்ளார். அதில் கேப்ஷனாக, 'நான் என் தலைமுடியை இன்னும் வளர்க்கணுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலர், வேண்டாம், நீண்ட கூந்தல்தான் உங்களுக்கு அழகு என்று கூறியுள்ளனர்.

மயக்கும் கண்கள்

மயக்கும் கண்கள்

இன்னும் சிலர், 'நீங்களே அநியாய அழகு... இதுல கூந்தல் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன? என்று கேட்டுள்ளனர். சில ரசிகர்கள், உங்களுக்கு அழகே அந்த மயக்கும் கண்கள்தான். அதை இப்படி கண்ணாடி போட்டு மறைச்சா எப்படி? என்று கேட்டுள்ளனர். இன்னொருவர் முதல்ல துணிய போட்டு கால்களை மறைங்க, அப்புறம் ஹேர் பத்தி யோசிக்கலாம் என்று கலாய்த்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X