ராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்
Recommended Video

மும்பை: ராதிகா ஆப்தேவிடம் சில்மிஷம் செய்து அறை வாங்கியவர் தெலுங்கு நடிகராம்.
மனதில் பட்டதை பயப்படாமல் வெளியே சொல்பவர் நடிகை ராதிகா ஆப்தே. அவர் நடிகை நேஹா தூபியா நடத்தும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறிய ஒரு விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறை
முதல் நாள் படப்பிடப்பில் தனது பாதங்களை வருடிய பிரபல நடிகரை ஓங்கி கன்னத்தில் அறைந்ததாக ராதிகா ஆப்தே தெரிவித்தார். அந்த சம்பவம் தமிழ் படத்தில் நடித்தபோது நடந்ததாக முதலில் செய்திகள் வெளியாகின.

ராதிகா
ராதிகா தெலுங்கு படத்தில் நடித்தபோது தான் பிரபல நடிகரை அறைந்துள்ளார். முதல் நாள் படப்பிடிப்பில் உடல்நலம் சரியில்லாமல் அவர் படுத்திருக்கும் காட்சியை படமாக்கியுள்ளனர்.

சில்மிஷம்
காட்சிக்காக படுத்திருந்த ராதிகாவின் கால்களை அந்த நடிகர் வருட கோபம் அடைந்த ராதிகா எழுந்து அனைவர் முன்பும் அந்த நடிகரை அறைந்துள்ளார்.

பெரிய நடிகர்
என்னிடம் அடி வாங்கிய நடிகர் பெரிய நடிகர் என்றும், அவர் அதிகாரம் படைத்தவர் என்றும் என்னிடம் கூறினார்கள். யாராக இருந்தால் எனக்கு என்ன. அடி வாங்கியதில் இருந்து அவர் என்னை மறுபடியும் தொடவில்லை என்றார் ராதிகா.

கபாலி
கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்தது வித்தியாசமான அனுபவம். அவர் ரொம்ப நல்ல மனிதர். 2 தெலுங்கு படங்களில் நடித்தபோது தான் பிரச்சனையாக இருந்தது என்று ராதிகா தெரிவித்தார். தெலுங்கு நடிகர் அதுவும் அதிகாரம் படைத்தவர் என்றதும் ரசிகர்கள் அவர் யார் என்பதை யூகித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











