நான் ஒரு நடிகைதான்… ஆனாலும் இதைப்பற்றி பேசவேண்டியது என்னுடைய கடமை!
மாதவிடாய் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
மும்பை: மாதவிடாய் தொடர்பான மூட நம்பிக்கைகள் களையப்பட வேண்டுமென நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
சமூக அவலங்களுக்கு எதிராக எப்போதுமே தைரியமாக தன்னுடைய குரலை உயர்த்தி வருபவர் நடிகை ராதிகா ஆப்தே.பாலிவுட் நடிகையான இவர், தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் மனைவியாக கபாலி திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இப்போது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான நெட்ஃபிலிக்ஸ் சீரீஸான ஸ்கேர்டு கேம்ஸ் நல்ல வரவேற்ப்பைக் கொடுத்தது.

சுகாதாரம்
பெண்கள் சுகாதரம் தொடர்பாகப் பேசியுள்ள ராதிகா ஆப்தே, இன்னும் நம் நாட்டில் மாதவிடாய் என்பது மிகப்பெரிய மூட நம்பிக்கைகள் பிண்ணப்பட்ட விஷயமாக உள்ளது என பெண்கள் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

சிரிப்பூட்டும் கதைகள்
மாதவிடாய் காலங்களில் எப்படி சுகாதாரமாக இருக்க வேண்டுமென கற்பிக்க வேண்டுமெனக் கூறும் ராதிகா ஆப்தே, ,மாதவிடாய்த் தொடர்பாக காலங்காலமாய் ஆயிரக்கணக்கான மூடக் கதைகள் சொல்லப்பட்டுள்ளதாகவும், அவற்றையெல்லாம் கேட்டால் சிரிப்பை அடக்க முடியாது எனவும் கூறினார்.நம் நாட்டு மக்கள் மாதவிடாய் மற்றும் பெண்களின் சுகாதாரம் குறித்துப் பேச தயக்கம் காட்டுகின்றனர். ஓரே நாளில் மாற்றம் நிகழாது எனவும், படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு
அருணாச்சலம் முருகானந்தத்தின் உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட பேட் மேன் திரைப்படத்தில் அக்ஷய் குமாருடன் நடித்திருந்தார் ராதிகா ஆப்தே. அப்படத்தை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், இதுபோன்ற விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும், ஆனாலும் இன்னும் முழுமையடையவில்லை எனவும் தெரிவித்தார்.

என்னுடைய கடமை
என்று பெண்களின் சுகாதாரம் மற்றும் மாதவிடாய் பற்றி தயக்கமில்லாமல் பேச ஆரம்பிக்கிறோமோ அதுதான், விழிப்புணர்வின் முதல்படி எனவும் ராதிகா குறிப்பிட்டார். பல சுவாராஸ்யமான விஷயங்களை சினிமால் கொண்டு வருவது நடிகையாக தன்னுடைய பணியாக இருந்தாலும், இதுபோன்ற விஷயங்களில் பங்கெடுப்பது கடமை என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











