என்னம்மா இப்படி கவர்ச்சி காட்டுறீங்களேம்மா: ராதிகா ஆப்தே போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
மும்பை: பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலிவுட் படங்களில் பிசியாக உள்ள ராதிகா ஆப்தேவுக்கு ஜி.க்யூ. வுமன் ஆஃப் திய இயர் விருது கிடைத்தது. விருது விழாவுக்கு அழகாக சென்றிருந்தார் அவர்.
தனக்கு விருது கிடைத்த நல்ல செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தார் அவர். இதையடுத்து தனது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அந்த நல்ல செய்தியை தெரிவித்தார். தனக்கு விருது வழங்கிய ஜி.க்யூ.வுக்கும் நன்றி தெரிவித்தார்.

அவருக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி தான் என்றாலும் அவரின் புகைப்படம் தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ரொம்பவே ஃப்ரீயாக உடை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார்.
திருமணமாகிவிட்டால் இழுத்துப் போர்த்திக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்பதில் ராதிகாவுக்கு உடன்பாடு இல்லை. அதனால் தனது படுகவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











