தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே மீட்டிங்.. நிர்வாணமாக பேபி பம்ப் போட்டோஷூட் மிரட்டிய ராதிகா ஆப்தே!
சென்னை: 39 வயதில் நடிகை ராதிகா ஆப்தே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 4 நாட்கள் முன்னதாக தனது இன்ஸ்டாகிராமில் பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே மீட்டிங் ஒன்றில் பங்கேற்பதாக லேப்டாப் மற்றும் குழந்தையுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், தற்போது கர்ப்பகாலத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.
2005ம் ஆண்டு இந்தியில் வெளியான வா லைஃப் ஹோத்தோ ஹைசி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ராதிகா ஆப்தே கடந்த 2012ம் ஆண்டு தமிழில் பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தின் மூலம் அறிமுகமானார்.

அழகுராஜா, வெற்றிச்செல்வன் படங்களில் நடித்து வந்த ராதிகா ஆப்தே பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தியளவில் பிரபலமானார்.
2013ல் திருமணம்: 2011ம் ஆண்டு பெனிடிக்ட் டெய்லர் என்பவரை லண்டனில் சந்தித்து காதல்வயப்பட்ட ராதிகா ஆப்தே தனது திருமணத்தை 2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தி முடித்தார். ஆனால், அவருக்கு குழந்தை பிறக்கும் வரை பலருக்கும் அவர் திருமணமானவர் என்பதே தெரியாமல் ரகசியமாகவே இருந்தது. திருமணமாகி சுமார் 11 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு கர்ப்பமான நிலையில், அதனை அறிவித்த ராதிகா ஆப்தே 4 நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்ததாக போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே: அடுத்த புராஜெக்ட்டுக்கான மீட்டிங்கை குழந்தை பிறந்ததற்கு பின்பு முதல் முறையாக சந்திக்கிறேன் என லேப்டாப் முன்பாக ஜூம் மீட்டிங்கில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார் ராதிகா ஆப்தே. பெண் குழந்தையை பெற்ற ராதிகா ஆப்தேவிற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நிர்வாணமாக பேபி பம்ப் போட்டோஷூட்: இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே நிர்வாணமாக வலை போன்ற உடையை அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த உடலையும் காட்டியபடி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தனது கர்ப்ப வயிற்றையும் மகப்பேறு காரணமாக பருமனான தனது உடலையும் வெளிச்சம் போட்டுக் காட்டி பதை பதைக்க வைத்துள்ளார்.

செம போல்டாக: 2016ம் ஆண்டு வெளியான பார்ச்சட் படத்தில் நிர்வாணமாகவே ராதிகா ஆப்தே நடித்திருப்பார். லஸ்ட் ஸ்டோரீஸ் மற்றும் சில விளம்பரங்களில் தனது அந்தரங்க பகுதிகளை அப்படியே ஓபனாக காட்டி போல்டாக நடித்து ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பினார். அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம், மீடூ இயக்கம் என பெண்களுக்கு ஆதரவாகவும் சினிமாவில் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் பற்றி பேசியதால் பாலிவுட்டில் பட வாய்ப்புகள் இவருக்கு குறைந்து ஓடிடியில் மட்டுமே நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.


Click it and Unblock the Notifications











