ஹீரோயின் டு இயக்குநர்.. ரஜினி பட நாயகியின் அதிரடி மாற்றம்!

நடிகர் ரஜினியின் கபாலி படத்தில் நாயகியாக நடித்த ராதிகா ஆப்தே, தற்போது பாலிவுட்டில் குறும்படம் ஒன்றை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

மும்பை: பாலிவுட் நாயகி ராதிகா ஆப்தே, வெப் தொடர்களில் நடித்த அனுபவங்களை கொண்டு அரை மணி நேர குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

ரஜினியின் கபாலி படத்தில் நாயகியாக நடித்திருந்த ராதிகா ஆப்தே, பல பாலிவுட் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது ஸ்லீப்வாக்கர்ஸ் என்ற அரை மணி நேர குறும்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

தமிழில்

தமிழில்

பிரகாஷ் ராஜின் தோனி, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினியின் கபாலி, வெற்றிச்செல்வன் என பல தமிழ் படங்களில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். சில தமிழ் இயக்குநர்கள் பாலியல் ரீதியாக இவருக்கு தொல்லை கொடுத்ததாகவும் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார் ராதிகா ஆப்தே.

சர்ச்சை நாயகி

சர்ச்சை நாயகி

தமிழில் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் பல சர்ச்சைகளை கிளப்பி வருபவர் தான் ராதிகா ஆப்தே. அக்‌ஷய் குமார் தயாரிப்பில் வெளியான பார்சத் படத்தில் முழு நிர்வாணமாக நடித்து இந்திய திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ்

பாலிவுட்டில் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் ராதிகா ஆப்தேவுக்கு புதிய திரைப்படங்கள் வருவது குறையத்தொடங்கின. இதனால், ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகும் பல வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனால், ராதிகா ஆப்தே உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

லஸ்ட் ஸ்டோரிஸ்

லஸ்ட் ஸ்டோரிஸ்

நெட்பிளிக்ஸில் ராதிகா ஆப்தே நடிப்பில் மிகவும் பிரபலமான ஒரு வெப் தொடர் என்றால் அது லஸ்ட் ஸ்டோரி தான். கரண் ஜோஹர், ஜோயா அக்தர், அனுராக் கஷ்யாப் மற்றும் திபாகர் பானர்ஜி ஆகிய நான்கு இயக்குநர் தனித்தனியாக இயக்கிய நான்கு கதைகள் தான் லஸ்ட் ஸ்டோரிஸாக வெளியானது.

இதில் பிரபல இயக்குநரான அனுராக் கஷ்யாப் இயக்கிய கதையில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார். பாலிவுட்டில் தற்போது கலக்கி வரும் கியாரா அத்வானியும் லஸ்ட் ஸ்டோரிஸில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயின் டு இயக்குநர்

ஹீரோயின் டு இயக்குநர்

இப்படி தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த ராதிகா ஆப்தே, தற்போது இயக்குநராக அப்கிரேட் ஆகியுள்ளார். Sleepwalkers எனும் அரை மணி நேர படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் குல்ஷன் தேவய்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சஹானா கோஸ்வாமியும் இதில் நடித்துள்ளார். ஸ்லீப்வாக்கர்ஸ் குறும்படத்தை ஹனி ட்ரேஹன் மற்றும் அபிஷேக் சவுபே இணைந்து இயக்கியுள்ளனர்.

வேற மாதிரி படம்

வேற மாதிரி படம்

ராதிகா ஆப்தே இயக்கியுள்ள இந்த ஸ்லீப்வாக்கர்ஸ் திரைப்படம் சாதாரண படமாக இருக்காதாம். சமூகத்தை கேள்வி கேட்கும் வித்தியாசமான முயற்சியை ராதிகா ஆப்தே கையில் எடுத்துள்ளார் என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹனி ட்ரேஹன், ராதிகா ஆப்தேவுக்கு பாராட்டு பத்திரம் வழங்கியுள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X