வரலட்சுமியின் திருமண கொண்டாட்டம் கோலாகலம்.. செம டான்ஸ் போட்ட ராதிகா.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார். 38 வயதாகும் அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை நாளை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். தாய்லாந்தில் அவர்களது திருமணம் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. இந்தச் சூழலில் திருமண கொண்டாட்டத்தில் ராதிகா நடனம் ஆடிய வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக வரலட்சுமி தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

Varalaxmi Radhika Tamil Cinema

வாய்ப்புகளை தவறவிட்ட வரலட்சுமி: வரலட்சுமிக்கு முதல் படம் போடா போடி என்றாலும் அவர் பாய்ஸ் படத்திலேயே அறிமுகமாகும் சூழல் உருவானது. ஆனால் சரத்குமார் அனுமதிக்காததால் அவரால் அந்தப் படத்தில் நடிக்கமுடியவில்லை. அதேபோல் காதல்,சரோஜா உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சரத்குமாரின் அனுமதி கிடைக்காததால் அந்தப் படங்களிலும் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடப்த்தக்கது.

போதிய வாய்ப்பு இல்லை: பாலா இயக்கத்தில் வரலட்சுமி நடித்த தாரை தப்பட்டை படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் அவர் எதிர்பார்த்தபடி வரிசையாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார். அடுத்து தெலுங்கில் கொட்ட பொம்மாலி ஐபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நிச்சயதார்த்தம்: 38 வயதாகும் வரலட்சுமி ஆரம்பத்தில் விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அது வெறும் கிசுகிசு என்பது பின்னர் உறுதியானது. சூழல் இப்படி இருக்க அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். அந்தக் காதலுக்கு வரலட்சுமியின் வீட்டில் க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது. எனவே அவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதும்; மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை திருமணம்: இருவரின் திருமணம் தாய்லாந்தில் நாளை நடைபெறவிருக்கிறது. இதில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். நாளை திருமணம் நடக்கவிருப்பதையொட்டி மெஹந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. வரலட்சுமி மஞ்சள் நிற கவுனில் தங்கம் போல் மின்னினார்.

ராதிகா நடனம்: இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு நடைபெறும் கொண்டாட்டம் மேலும் களைகட்ட தொடங்கியிருக்கிறது. அதாவது வரலட்சுமியின் மெஹந்தி கொண்டாட்டத்தின்போது ராதிகா சரத்குமார் தனது மகள் ரயானே உடன் ரவுடி பேபி பாடலுக்கு செம நடனம் ஆடினார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. தாய்லாந்தில் திருமணத்தை முடித்துவிட்டு வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதில் அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X