ராதிகாவுக்கு அறுவை சிகிச்சை.. இரண்டு மாதங்கள் ரொம்ப கஷ்டப்பட்டாராம்.. மகளிர் தினத்தில் உருக்கம்
நடிகையும், சரத்குமாரின் இரண்டாவது மனைவியுமான ராதிகா தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகை என்கிற பெயரை பெற்றவர். ஹீரோயினாக தனது திரை பயணத்தை ஆரம்பித்த அவர் இப்போது கோலிவுட்டில் தவிர்க்க முடியாத குணசித்திர நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சினிமா மட்டுமின்றி சித்தி உள்ளிட்ட சீரியல்களிலும் தனது தடத்தை பதித்திருக்கும் அவர்; அரசியலிலும் இருக்கிறார். இந்தச் சூழலில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகர் எம்.ஆர்.ராதா. அவருக்கு பிறந்தவர்தான் ராதிகா. லண்டனில் படித்த அவர்; தனது தந்தையை பார்க்க வந்தபோது பாரதிராஜாவின் கண்ணில் பட்டு சினிமாவுக்கு வந்தார். முதல் படமான கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தவண்ணம் இருந்தன. அதன் காரணமாக 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி: தான் பீக்கில் இருந்தபோது ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்தார். பக்கத்து வீட்டு பெண் போல் அவர் இருந்ததாலும், நடித்ததாலும் தமிழ்நாட்டில் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே 80களில் உருவானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல வருடங்கள் அவர் டாப் 5 ஹீரோயினகள் லிஸ்ட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா மட்டுமின்றி சீரியலிலும் பிஸியான அவர்; அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்கூட போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
திருமண சர்ச்சை: ராதிகாவின் திருமணங்கள் சர்ச்சைக்கு உள்ளானது. முதலில் விஜயகாந்த்தை அவர் காதலித்தார். ஆனால் அந்தக் காதல் சில காரணங்களால் பிரிவில் முடிந்தது. பிறகு நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமணமும்; அடுத்ததாக அவர் செய்த திருமணமும் நீண்ட காலம் பயணிக்கவில்லை. இதற்கடுத்ததாக நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராதிகாவுக்கு ரயான் என்ற மகளும், ராகுல் என்ற மகனும் இருக்கிறார்கள்.

வரலட்சுமிக்கு சப்போர்ட்: சரத்குமாரும் ராதிகாவுக்கு முன்னர் சாயாவை திருமணம் செய்து பிரிந்தவர்தான். அவர்களுக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. தனது கணவரின் முதல் மனைவியுடைய மகள் என்று வேற்றுமை பார்க்காமல் வரலட்சுமிக்கு பல விஷயங்களில் பக்கபலமாக இருப்பவர் ராதிகா. அவரது திருமணத்துக்கு கூட முன்நின்று பல வேலைகளை செய்தார். அதேபோல் வரு சினிமாவில் நடிப்பதற்கு சரத்குமாரிடன் பெர்மிஷன் வாங்கியதும் ராதிகாதான் என்பது கவனிக்கத்தக்கது.
ராதிகாவின் போஸ்ட்: இந்நிலையில் ராதிகாவுக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர், "கடந்த இரண்டு மாதங்களாக நான் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இரண்டு படங்களில் வேலை செய்தேன். அப்போது எனது முழங்காலில் அதீத வலி இருந்தது. வலி நிவாரணி மாத்திரைகள், முழங்கால் பிரேஸ் உள்ளிட்டவைகளை வைத்து சமாளித்தேன்.
அறுவை சிகிச்சை: ஆனால் ஒருகட்டத்தில் அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்றானது. அதன்படி அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அப்போது எனது தோழி என்னிடம், 'நீங்கள் அறுவை சிகிச்சை செய்ததற்கும், படங்களை முடித்துக்கொடுத்ததற்கும் நன்றி சொல்வார்கள் என்று நம்புகிறேன்' என கூறினார். ஆனால் நான் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. எனது கவனம் எல்லாம் வேலையில் மட்டும்தான் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை அதிகம் நேசித்து, தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என இந்த மகளிர் தினத்தில் விரும்புகிறேன். எனக்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு எனது கணவர் சரத்குமார் என்னை ஒரு குழந்தையைப் போல் கவனித்துக்கொண்டார். மகளிர் தின வாழ்த்துகள்.. வலிமையாக இருங்கள்" என்று உருக்கத்துடன் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











