ராஷ்மிகா மந்தனா பட்ட கஷ்டம்.. இப்போ ராதிகாவுக்கும் இப்படியொரு மன உளைச்சலா?.. ஏஐ ரொம்ப மோசம்!

https://x.com/itzSureshJohn/status/1911861340957999258மும்பை: எந்தவொரு நடிகர்களையும் நடிகைகளையும் மோசமாக எடிட் செய்து ஏஐ மூலம் வீடியோ வெளியிட்டு ஒரு கும்பல் தனியாக காசு பார்க்கத் தொடங்கி விட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பிரபலங்களை டார்கெட் செய்து இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்களை வெளியிட்டால் பலரது கவனத்தை ஈர்த்து அதிக லாபத்தை ஈட்ட முடியும் என ஏஐ மூலம் நூதன மோசடிகள் நடைபெற்று வருகின்றன.

நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட்டில் குலுங்க குலுங்க வருவது போன்ற ஏஐ வீடியோ சில காலத்துக்கு முன்பு வெளியாகி பலரது கவனத்தை கவர்ந்தது. அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் அந்த ஏஐ வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர்களை குழந்தைகளாகவும் ராஜாக்கள் போன்று மாற்றி ஏஐ எடிட் மூலம் அழகு பார்க்கும் வீடியோக்களை ரசிக்கும் நிலையில், அதற்கு எதிர்மறையாக மோசமாகவும் அதே ஏஐ எடிட் செய்து வெளியிட்டு வருவதை பார்த்து குறிப்பாக நடிகைகள் அச்சம் அடைந்து வருகின்றனர். ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து தற்போது நடிகை ராதிகா மதனுக்கும் ஏஐ எடிட் மூலம் அப்படியொரு பிரச்சனை வந்திருக்கிறது.

Radhika Madan Suriya AI

யாரு இந்த ராதிகா மதன்?: நாகினி நடிகை மெளனி ராய் போல இவரும் சின்னத்திரையில் டாப் நடிகையாக வலம் வந்து அதன் பின்னர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். 2018ம் ஆண்டு வெளியான பதாகா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், கடந்த ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று இந்தி ரீமேக்கான சர்ஃபிரா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் இந்த ராதிகா மதன்.

பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சை: நடிகை ராதிகா மதன் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் போது வேறுமாதிரி இருந்தார் என்றும் தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆளே அடையாளம் தெரியாதவர் போல மாறிவிட்டார் என நெட்டிசன்கள் சிலர் கிளப்பிவிட்ட ஏஐ எடிட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதனை உண்மை என நம்பி ஏமாந்து டிரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், இதற்கு மேலும், அமைதி காத்தால் சரியாக இருக்காது என அதற்கு விளக்கம் அளித்துள்ளார் ராதிகா மதன்.

அது ஏஐ எடிட் வீடியோ: தான் இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறேன் என்றும் அது முழுக்க முழுக்க ஏஐ எடிட் செய்யப்பட்ட வீடியோ. நான் எந்தவொரு காஸ்மெடிக் சர்ஜரியையும் செய்துக் கொள்ளவில்லை என நடிகை ராதிகா மதன் அந்த வைரல் வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார். நடிகைகள் ஏஐ மூலம் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர் என்றும் தத்ரூபமாக ஏஐ எந்தளவுக்கு எடிட் செய்ய ஆரம்பித்து விடுகிறதோ அந்தளவுக்கு எதிர்காலத்தில் ஆபத்துக்களும் அதிகரிக்கும் என்கின்றனர்.

ராஷ்மிகா முதல் ஷிவானி வரை: மாநகரம் ஸ்ரீயின் லேட்டஸ்ட் வீடியோக்களை முதலில் பார்த்த ரசிகர்கள் இதுக்கூட ஏஐ வீடியோவா என்றுதான் முதலில் சந்தேகித்தனர். ஆனால், அவரது நிலைமையே இப்படி மாறிவிட்டதை தெரிந்து ஷாக் ஆகினர். ராஷ்மிகா மந்தனா முதல் ஷிவானி வரை பலரும் ஏஐ எடிட் மூலமும் தங்கள் உருவத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றிக் கொண்டனர் என்கிற விமர்சனத்துக்கும் உள்ளானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X