ஹீரோயின்
இயற்கை படத்தில் அறிமுகமான குட்டி ராதிகாவுக்கு அந்தப் படத்தைத் தொடர்ந்து வர்ணஜாலத்தில் நடிக்கவாய்ப்பு கிடைத்தது.
இந்த இரு படங்களிலுமே நல்ல பெயர் வாங்கிய ராதிகாவின் கையில் இப்போது 3 படங்கள்.
மீசை மாதவன்,சொல்லட்டுமா மற்றும் பெயரிடப்படாத ஒரு படம். மீசை மாதவன் படத்தில் ரமணா என்பவர் ஹீரோவாகஅறிமுகமாகிறார்.
கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து, கையில் படங்கள் இருந்தாலும் ராதிகா அத்தனை மகிழ்ச்சியாய் இல்லை.காரணம் முன்னணி ஹீரோக்கள் இவரை ஒதுக்குவதுதான்.
முதல் படமான இயற்கையில் ஷாம், அருண்குமார் என்றுசோப்ளாங்கி ஹீரோக்கள்.
வர்ணஜாலத்தில் ஸ்ரீகாந்த் நடித்தாலும் அதில் அவருக்கு ஜோடி சதா தான். ராதிகாசெகண்ட் ஹீரோயின் ஆக்கப்பட்டார்.
மீசை மாதவனில் புதிய ஹீரோ, அடுத்த இரு படங்களிலும் இன்னும் ஹீரோக்கள் முடிவாகவில்லை.
அதிலாவது யாராவது முன்னணி இளவட்ட நடிகர் நடிக்க மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
கோலிவுட்டில் தான் நிறைய பணம் கிடைக்கும் என்பதால் தமிழுக்கே அதிக முக்கியத்துவம் தரும் ராதிகா, அதேநேரத்தில் தனது சொந்த ஊரான கர்நாடகத்திலும் தனது கிரிப்பை விட்டுவிடத் தயாராக இல்லை. இதனால்இன்னும் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறவில்லை.
கன்னடத்திலும் இப்போது 4 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் பெங்களூருக்கும் சென்னைக்குமாக பறந்துகொண்டிருக்கிறார். இடையிடையே தெலுங்கிலும் தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











