கண்ணப்பா படத்தை புகழ்ந்து தள்ளிய ராதிகா.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க?

சென்னை: நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா படத்தில் நடித்திருக்கிறார். சிவபக்தரான கண்ணப்பரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க திரைத்துறை நட்சத்திரங்களுக்கென்று தனி ஷோ ஒன்றை படக்குழு நேற்று சென்னையில் போட்டது. அதில் ராதிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டு படம் பார்த்தார்கள்.

டோலிவுட்டின் சீனியர் நடிகரான மோகன் பாபுவுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். முதல் மகனான விஷ்ணு மஞ்சுவும் தந்தை போன்றே திரைத்துறையில் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவருக்கு இதுவரை மிகப்பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் திறமை வாய்ந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். கண்டிப்பாக இன்னும் சில வருடங்களில் அவர் பெரிய ஹீரோவாக மாறிவிடுவார் என்று பலரும் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

கண்ணப்பா விஷ்ணு: சூழல் இப்படி இருக்க விஷ்ணு இப்போது கண்ணப்பா படத்தில் நடித்திருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்தது. நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் படம் ஷூட் செய்யப்பட்டதால் கண்டிப்பாக விஷுவலும் தரமாக இருக்கும் என்ற ஆவலும் ரசிகர்களிடையே இருந்தது. சில நாட்களுக்கு முன்புதான் அந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸானது.

Radhika Praised Vishnu Manchu s Kannappa Movie
Photo Credit:

ஓரளவுக்கு வரவேற்பு: படம் வெளியாவதற்கு முன்னதாகவே படக்குழு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதாவது கண்ணப்பா படத்தை யாராவது ட்ரோல் செய்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது வரவேற்பை ஓரளவுக்கு கொடுத்தார்கள். படம் வசூல் ரீதியாகவும் டீசன்ட்டான நிலையில்தான் இருக்கிறது என பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்களும் கூறுகின்றன.

ஸ்பெஷல் ஷோ: இந்நிலையில் கோலிவுட் திரைத்துறையினருக்கு நேற்று கண்ணப்பா படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது. அதில் ராதிகா, பொன்ராம், பி.வாசு, பிரபுதேவா, பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன் என பலர் கலந்துகொண்டு படம் பார்த்தார்கள். படம் பார்த்த பிறகு பேசிய ராதிகா, "நான் முதலில் மோகன் பாபுவுக்கு நன்றியை சொல்ல வேண்டும். எனது தந்தை ஒரு கடவுள் மறுப்பாளர். அவரிடம் நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஒருமுறை கேட்டேன்.

அப்பா சொன்னது: அதற்கு அவரோ, 'நீ நினைப்பதுதான்' என்று கூறினார். இந்தப் படத்தை பார்க்கும்போது அப்பாவின் நியாபகம் வந்தது. ஆன்மிக படமாக இருந்தாலும் பக்தி என்றால் என்ன? என்பதை மிகவும் அழகாக ஆழமாக சொல்லியிருக்கிறார்கள். விஷ்ணு மஞ்சுவின் ந்டிப்பு அபாரமாக இருந்தது. திண்ணன் மற்றும் கண்ணப்பராக அவர் சிறப்பாகவே நடித்திருக்கிறார். இப்படத்தில் எனது கணவர் சரத்குமாரும் நல்ல கேரக்டரை ஏற்றிருக்கிறார்.

தெய்வீக செயல்: இப்படத்தில் நடிப்பதெல்லாம் ஒரு தெய்வீக செயல் என்று என்னிடம் அவர் கூறினார். நம்மை மீறி ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை இன்றைய் சமுதாயத்துக்கு இப்படம் உணர்த்தும்" என்றார். முன்னதாக படத்தை தனியாக பார்த்த ரஜினி விஷ்ணு மஞ்சுவை தனது வீட்டுக்கு வரவழைத்து பாராட்டினார் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X