ராதிகாவை க்ளோஸ் செய்ய பார்த்த பாக்யராஜ்.. நல்ல வேளை தப்பிச்சாங்க.. ஆத்தாடி பெரிய சம்பவம்
சென்னை: இந்திய திரைத்துறையில் திரைக்கதை மன்னர் என்று புகழப்படுபவர் நம்ம பாக்யராஜ். முதலில் ஒரு திருமணம் செய்த அவர்; முதல் மனைவி இறந்ததால் அடுத்ததாக நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரது மகனும் திரைத்துறையில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. மகளும் ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் பாக்யராஜ் பற்றி ராதிகா பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்தவர் பாக்யராஜ். எதுவாக இருந்தாலும் பாக்யராஜைத்தான் பாரதிராஜா அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் பல வருடங்கள் வேலை கற்றுக்கொண்டு இயக்குநராக மாறினார் பாக்யராஜ். அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இயக்குநராக ஜொலித்த அவர்; யாருக்கும் எதற்கும் காம்ப்ரமைஸ் ஆகாமல் தனது பாணியில் எடுத்து ஒரு படத்தை ஹிட் கொடுக்கக்கூடியவர்களில் எப்போதுமே இவர் ஸ்பெஷல்தான். இவரிடம் வேலை கற்றவர்கள்தான் பார்த்திபன், லிவிங்ஸ்டன், ஜி.எம். குமார் உள்ளிட்டோர்.

இந்திய திரைத்துறையில் திரைக்கதை மன்னன்: பாக்யராஜின் படங்களின் ஸ்பெஷலே அதன் திரைக்கதைதான். அவரது திரைக்கதையை இப்போது பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அலட்டிக்கொள்ளாமல் ரொம்பவே இயல்பாக அவரது சீன்கள் எல்லாம் இருக்கும். இதன் காரணமாக அவரை திரைத்துறையின் திரைக்கதை மன்னன் என கொண்டாடினார்கள். ஹிந்தியில் அவர் படம் எடுத்தபோதுகூட தன்னுடைய ஸ்டைலில்தான் திரைக்கதையை அமைத்தார்.
பாக்யராஜ் பெர்சனல் வாழ்க்கை: அவரது பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை, முதலில் ஒரு திருமணம் நடந்தது. ஆனால் முதல் மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். அதனையடுத்து சில காலம் கழித்து நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் சாந்தனுவும், சரண்யாவும். தன்னை போன்றே தனது வாரிசுகளையும் சினிமாவில் களமிறக்கினார் இயக்குநர். ஆனால் பெரிய வெற்றி அவர்களுக்கு கிடைக்கவில்லை.
ட்ரெண்டாகும் ராதிகாவின் பேட்டி: இந்நிலையில் பாக்யராஜ் பற்றி நடிகை ராதிகா கூறியிருக்கும் விஷயம் ஒன்று சோஷியல் மீடியாவில் அதீத கவனத்தை ஈர்த்தது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், "ஒரு படத்தின் ஷூட்டிங்கில் நானும் பாக்யராஜும் கோவாவில் பைக்கில் செல்வது போன்ற காட்சி. அந்தக் காட்சியை படமாக்கும்போது பைக்கில் சென்றோம். அப்போது அவர் என்னிடம், 'ஏய் புள்ள முன்னாடி என்ன வருதுனு பாரு' என சொன்னார். பார்த்தபோது ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்.
க்ளோஸ் செய்திருப்பார்: உட்னே நான் அவரிடம், 'அடப்பாவி கண்ணு தெரியாதா?.. நீ வண்டியை நிறுத்து என்று சொல்லி இறங்கிவிட்டேன். இல்லையென்றால் அவர் என்னை அன்றைக்கே க்ளோஸ் செய்திருப்பார்' என்று கூறினார். முன்னதாக, இன்னொரு நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், 'ராதிகா என்னை ஆங்கிலத்தில்தான் திட்டுவார். உடனே நானோ என்ன வேண்டுமானாலும் திட்டிக்கோ. எனக்குதான் ஆங்கிலம் புரியாதே' என சொல்வேன் என்று பாக்யராஜும் கலகலப்போடு கூறியிருந்தார். இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications