வேறு எந்த நடிகையும் இல்லை.. நீதான்.. ராதிகாவை புகழ்ந்த கமல்ஹாசன்.. ஏன் தெரியுமா?
சென்னை: எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர். 80களில் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்த அவர் அதற்கு பிறகு கேரக்டர் ரோலை ஏற்க ஆரம்பித்தார். எந்த ரோலாக இருந்தாலும் அசால்ட்டாக செய்யக்கூடிய அவர்; இப்போது தாய் கிழவி என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. முக்கியமாக ராதிகாவின் நடிப்பும், கெட்டப்பும் அனைவரையும் வாயடைக்க வைத்திருக்கிறது.
பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா. முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளிய அவர்; கோலிவுட்டில் முக்கியமான ஹீரோயினாக வளர ஆரம்பித்தார். அழகு மட்டுமின்றி திறமையான நடிகை என்ற பெயரை அவர் அறிமுகமான சில படங்களிலேயே எடுத்துவிட்டார். தமிழில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி ரஜினிகாந்த், விஜயகாந்த் என 80களில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
பெர்சனல் வாழ்க்கை: அவர் முதலில் விஜயகாந்த்தை காதலித்தார். ஆனால் சில காரணங்களால் அந்தக் காதல் பாதியில் முடிந்தது. அதனையடுத்து பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமண உறவும் விவாகரத்தில் முடிந்தது. இப்படிப்பட்ட சூழலில் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக அவர்கள் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

கேரக்டர் ரோலில் மிரட்டும் ராதிகா: சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து கேரக்டர் ரோல்களை ஏற்றார். அப்படி அவர் நடித்த கிழக்கு சீமையிலே, ஜீன்ஸ் உள்ளிட்ட படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். வெள்ளித்திரையில் மின்னியது போன்றே சின்னத்திரையிலும் சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழ்நாட்டு குடும்பங்களில் ஒருவராக மாறினார் ராதிகா. இப்படி அத்தனை ஏரியாக்களிலும் தன்னை நிரூபித்த சில நடிகைகளில் ராதிகாவும் ஒருவர்.
தாய் கிழவி: இப்போதும் பிஸியாக நடித்துவரும் ராதிகா; கடைசியாக கீர்த்தி சுரேஷுடன் ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்திருந்தார். அப்படம் தோல்வியடைந்தாலும் அவர்கள் இரண்டு பேரின் நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அடுத்ததாக தாய் கிழவி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் பவுனு தாயி என்ற கேரக்டரை ஏற்றிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்தின் டீசரை பார்த்து பலரும் வாயடைத்து போனார்கள். ஏனெனில் ராதிகாவின் கெட்டப்பு, நடிப்பும் அப்படி இருந்தது. நிச்சயம் இப்படத்துக்காக அவருக்கு ஏகப்பட்ட விருதுகள் வரலாம் என்று இப்போதே கணித்திருக்கிறார்கள்.
ராதிகாவின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "தாய் கிழவி மேக்கப்பை ஃபோட்டோ எடுத்து கமலுக்கு அனுப்பியதும் அவர் த்ரில் ஆகிவிட்டர். வேறு எந்த ஹீரோயினும் இதை செய்தது இல்லை. நீ செய்துவிட்டாய் சூப்பர் என பாராட்டினார். அப்போது நான் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ப்ரியவுக்கு ஃபோன் செய்து, 'இந்த மாதிரி ஒரு நடிகை பிறந்துதான் வரணும். ஷீ இஸ்ட் பெஸ்ட் என்றும் கூறியிருக்கிறர். அப்போது நான் வானத்தில் பறந்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











