ராதிகா மீது இவ்வளவு பாசமா?.. நயன்தாரா செய்திருப்பதை பாருங்க... ப்பா வேற லெவல் பாஸ்
சென்னை: எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர். 80களில் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்த அவர் அதற்கு பிறகு கேரக்டர் ரோலை ஏற்க ஆரம்பித்தார். எந்த ரோலாக இருந்தாலும் அசால்ட்டாக செய்யக்கூடிய அவர்; கடைசியாக தாய் கிழவி திரைப்படத்தில் நடித்திருந்தார். படமானது மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக சூர்யாவுடன் விஸ்வநாத்&சன்ஸ், நயன்தாராவுடன் ஹாய் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அவர் திரையுலகத்துக்கு வந்து 49 ஆண்டுகள் நிறைவு பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா. முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளிய அவர்; கோலிவுட்டில் முக்கியமான ஹீரோயினாக வளர ஆரம்பித்தார். அழகு மட்டுமின்றி திறமையான நடிகை என்ற பெயரை அவர் அறிமுகமான சில படங்களிலேயே எடுத்துவிட்டார். தமிழில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் என 80களில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

ராதிகாவின் பெர்சனல் வாழ்க்கை: அவர் முதலில் விஜயகாந்த்தை காதலித்தார். ஆனால் சில காரணங்களால் அந்தக் காதல் பாதியில் முடிந்தது. அதனையடுத்து பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமண உறவும் விவாகரத்தில் முடிந்தது. இப்படிப்பட்ட சூழலில் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக அவர்கள் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
கேரக்டர் ரோலில் மிரட்டும் ராதிகா: சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து கேரக்டர் ரோல்களை ஏற்றார். அப்படி அவர் நடித்த கிழக்கு சீமையிலே, ஜீன்ஸ் உள்ளிட்ட படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். வெள்ளித்திரையில் மின்னியது போன்றே சின்னத்திரையிலும் சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழ்நாட்டு குடும்பங்களில் ஒருவராக மாறினார் ராதிகா. இப்படி அத்தனை ஏரியாக்களிலும் தன்னை நிரூபித்த சில நடிகைகளில் ராதிகாவும் ஒருவர்.
தாய் கிழவி: இப்போதும் பிஸியாக நடித்துவரும் ராதிகா; கீர்த்தி சுரேஷுடன் ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்திருந்தார். அப்படம் தோல்வியடைந்தாலும் அவர்கள் இரண்டு பேரின் நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அடுத்ததாக தாய் கிழவி படத்தில் நடித்தார். சிவக்குமார் முருகேசன் இயக்கியிருந்த அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டது. ராதிகாவுக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்றும் ஆரூடங்கள் கூறப்பட்டுள்ளன.
49 வருடங்கள் நிறைவு: அடுத்ததாக சூர்யாவுடன் விஸ்வநாத்&சன்ஸ், நயன்தாராவுடன் ஹாய் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் திரைத்துறைக்கு வந்து 49 வருடங்களை நிறைவு செய்கிறார் அவர். அதனையொட்டி ஹாய் படக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ராதிகாவை கேக் வெட்ட வைத்து கொண்டாடினார்கள். நயன்தாரா மகிழ்ச்சியோடு ராதிகாவுக்கு கேக் ஊட்டிவிட்டார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications















