வரலட்சுமி பற்றி தப்பா பேசுனா க்ளோஸ்.. 2 பேர வெச்சு முடியலனு அப்பா புலம்புவாரு.. ராதிகா மகள் ஓபன்
சென்னை: நடிகை ராதிகா தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவர். பாரதிராஜாவால் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட அவர் 80களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என பலருடன் நடித்த ராதிகா நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரயான் என்கிற மகளும், ராகுல் என்கிற மகனும் இருக்கிறார்கள். சரத்குமாருக்கு ராதிகா இரண்டாவது மனைவிதான் என்றால் வரலட்சுமி மீதும் மிகப்பெரிய பாசம் வைத்திருப்பவர்.
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகா. இலங்கையில் பிறந்த அவர் தனது கல்லூரி படிப்பை லண்டனில் முடித்தவர். ஒருமுறை தனது தந்தையை காண தமிழ்நாடு வந்திருந்தபோது இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டார். ராதிகா முதன்முறையாக நடித்த கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ராதிகாவுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. அதனை சரியாக பயன்படுத்தவும் செய்தார்.

80களில் டாப் ஹீரோயின்: அதன் காரணமாக 80களில் டாப் ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டே சென்ற ராதிகா ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். அவர் கரியர் உச்சத்தில் இருந்தபோது நடிகர் விஜயகாந்த்துடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
சில திருமணங்கள்: மேலும் இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்து ஒருவருடம் ஒன்றாக வாழ்ந்தார். ஆனால் அவர்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு தொழிலதிபரையும் அவர் திருமணம் செய்ததாகவும் அதுவும் பாதியில் முடிந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. இப்படி ராதிகாவின் திருமண வாழ்க்கை தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்திருப்பவை. ஆனால் அதையெல்லாம் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்துடன் திருமணம்: இப்படிப்பட்ட சூழலில் ராதிகாவுக்கு சரத்குமாருடன் காதல் ஏற்பட்டது. சரத்தும் ஏற்கனவே சாயா தேவி என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்தார். பிறகு ராதிகாவும், சரத்தும் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ரயான் என்கிற மகள், ராகுல் என்கிற மகன் இருக்கிறார்கள். சரத்தின் முதல் மனைவியோடும், வரலட்சுமியோடும் ராதிகாவுக்கு நல்லவிதமான உறவு உண்டு. இரண்டு பேரும் சேர்ந்துதான் வரலட்சுமி நடிப்பதற்கு சரத்திடம் அனுமதி பெற்றார்கள் என்பதும் ஆரோக்கியமான ஒன்று.

முன் நின்று நடத்திய திருமணம்: வரலட்சுமி கடந்த வருடம் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தை முன் நின்று நடத்தியவர் ராதிகாதான். அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் வரலட்சுமிகூட ஒரு பேட்டியில் தனக்கு ராதிகா அம்மா இல்லைதான்; ஆனாலும் நானும் அவரும் ரொம்பவே க்ளோஸாக இருப்போம். அது நல்ல விஷயம்தான் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராதிகாவின் மகள் ரயான் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.
ரயான் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "வரலட்சுமியின் திருமணத்தில் எனது அம்மா ரொம்ப ஈடுபாடாக இருந்தார். அதனைப் பார்த்து பலரும் ராதிகாவுக்கு பெரிய மனசு என்றார்கள். ஆனால் அது அம்மாவின் இயல்பு. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. நானும், வரலட்சுமியும் ரொம்பவே க்ளோஸாக இருப்போம். திருமணத்துக்கு பிறகு பொங்கலுக்குக்கூட அவரது கணவரோடு எங்கள் வீட்டுக்கு வரு வந்திருந்தார். என்னைப் பொறுத்தவரைக்கும் எனது குடும்பம்தான் எல்லாமே. என்னுடைய அப்பா, அம்மா, வரலட்சுமி பற்றி யாராவது தவறாக பேசினால் சும்மா மட்டும் விடவே மாட்டேன். அப்படி பேசுபவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன். அம்மாவும் கொடுப்பார். அப்போது அப்பாவோ, 'ஐயோ இந்த ரெண்டு பேரையும் வெச்சிக்கிட்டு என்னால முடியல' என புலம்புவார்" என்றார்.
முன்னதாக, சிம்புவை வைத்து நயன்தாராவின் கணவர் இயக்கிய படம் போடா போடி. இந்தப் படம்தான் விக்னேஷ் சிவனுக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில்தான் சரத்குமாரின் மகளான வரலட்சுமி நடிகையாக அறிமுகமானார். இவர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கு பிறந்தவர். போடா போடி படத்துக்கு முன்பு வரலட்சுமியை நோக்கி பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் சரத் ஒத்துக்கொள்ளாததால் அந்த படங்களில் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது.
பிஸியான நடிகை: போடா போடி திரைப்படம் பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் வரலட்சுமியின் நடிப்பு பலரையும் ஈர்த்தது. துறுதுறு நடிப்பு, அட்டகாசமான நடனம் என நடிகைக்குரிய அத்தனை இலக்கணங்களும் அவருக்கு இருந்ததை அடுத்து வாய்ப்புகள் வர தொடங்கின. அப்படி சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலா வரலட்சுமியை தன்னுடைய தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் மிகப்பெரிய பெயரை பெற்றார் வரலட்சுமி. கரகாட்ட நடனம், தைரியமாக பேச்சு என படம் முழுக்க அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார்.
விஷாலுடன் காதல்?: தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு சில வாய்ப்புகள் வரலட்சுமிக்கு வந்துகொண்டிருந்தன. இதற்கிடையே அவர் விஷாலை காதலித்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது. மேலும் நடிகர் சங்க கட்டட பிரச்னையில் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் முட்டிக்கொண்டதால் இவர்களது காதல் பாதியில் முடிந்துவிட்டதாகவும் பலரும் பேசினார்கள். ஆனால் இதுகுறித்து வரலட்சுமியோ விஷாலோ பெரிதாக எந்த ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்துகொண்ட வரலட்சுமி: சூழல் இப்படி இருக்க மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார் வரலட்சுமி. நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். மேலும் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். வரலட்சுமியின் நிக்கோலாய் மீதான காதலுக்கு சரத்குமார் க்ரீன் சிக்னல் கொடுத்ததை தொடர்ந்து அவர்களது திருமணம் கடந்த வருடம் தாய்லாந்தி பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் வரலட்சுமி நடித்த மதகஜராஜா சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மெகா ஹிட்டானது. வரலட்சுமியும் அதில் கொஞ்சம் ஓவராகவே கிளாமர் காண்பித்திருந்தார்.
அடுத்தடுத்த படங்கள்: வரலட்சுமி திருமணம் செய்துகொண்ட பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அவர் கடைசியாக மேக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தில் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ஃபீனிக்ஸ் படத்திலும் முக்கியமான ரோலில் வரலட்சுமி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











