Radhika: தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. அச்சு அசல் அப்பாவைப்போல.. பூரிப்பில் ராதிகா சரத்குமார்!
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது குடும்ப போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
நடிகை ராதிகா சரத்குமார், பிரபல நாடக, திரைப்பட நடிகர் எம்.ஆர். ராதாவின் மகளாகப் பிறந்தவர். சிறுவயதிலேயே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், 1978ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் நடித்த கிராமத்து பெண் கதாபாத்திரம் மற்றும் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், நிறம் மாறா பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டை வால் குருவி, பூந்தோட்ட காவல்காரன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

ராதிகா சரத்குமார்: தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த ராதிகா, மூன்று திருமணங்களுக்கு பின் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ராகுல் சரத்குமார் என்ற மகன் உள்ளார். திரைப்படங்களுடன் சேர்த்து சின்னத்திரையிலும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்திய ராதிகா, சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி போன்ற தொடர்களின் மூலம் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயரை பெற்றார்.
அச்சு அசல் அப்பாவை போல: சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ராதிகா, தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் நடுவில் ராதிகா, ஒருபுறம் கணவர் சரத்குமார், மறுபுறம் மகன் ராகுல் என மூவரும் அழகாக நிற்கின்றனர். இந்த புகைப்படம் வெளியானவுடன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, "எப்போதும் அழகும் கம்பீரமும் கலந்த ஜோடி", "ராதிகாவிற்கு இன்னும் அதே அழகு குறையவே இல்லை“, ராகுலுக்கு அப்பாவைப் போலவே முகம் என பலரும் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். மகனுடன் இருக்கும் ராதிகாவின் இந்தப் போட்டோ, சமூக வலைதளங்களில் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications











