ஹிந்தி பேச முடியும்.. ஆனா பேசமாட்டோம்.. ராதிகா சரத்குமார் அதிரடி.. இவ்வளவு ஓபனா அடிச்சிட்டாங்களே
சென்னை: ராதிகா சரத்குமார் 80களில் பெரிய ஹீரோயினாக வலம் வந்தவர். அதனைத் தொடர்ந்து குணசித்திர வேடங்களை ஏற்க ஆரம்பித்தார். இப்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசரும், முதல் சிங்கிளும் பெரிய வரவேற்பை பெற்ற சூழலில்; அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.
எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா பாரதிராஜாவால் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டவர். முதல் படமான கிழக்கே போகும் ரயில் மெகா ஹிட்டாக; தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என அப்போதைய டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட்டாகவே செய்தன. தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கினார் ராதிகா.
சிறந்த நடிகை: பாரதிராஜாவின் அறிமுகம் என்றாலே அவர்கள் சிறந்த கலைஞர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை படத்துக்கு படம் ராதிகா நிரூபித்துக்கொண்டே இருந்தார். கரியர் கொஞ்சம் டவுன் ஆக ஆரம்பித்தபோது எதை பற்றியும் கவலைப்படாமல் கேரக்டர் ரோலை ஏற்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த கிழக்கு சீமையிலே, ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களும் பெரிய ஹிட்டாகி; குணச்சித்திர நடிகையாகவும் தனி முத்திரையை பெற்றுக்கொடுத்தது.

இப்போதும் பிஸி: இளம் தலைமுறையினர் கோலிவுட்டில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் இந்தக் காலத்திலும் ராதிகா படு பிஸியாக நடித்துவருகிறார். அவர் கேரக்டர் ரோலை ஏற்ற தர்மதுரை, நானும் ரௌடிதான் உள்ளிட்ட படங்கள் எல்லாம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. இப்போது அவர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தாய் கிழவி படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் படமானது ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில் வந்த படத்தின அப்டேட்டுகள் அனைத்தும் பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருக்கின்றன.
பாராட்டிய கமல்: முக்கியமாக அப்படத்தில் ராதிகா போட்டிருக்கும் மேக்கப் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. கெட்டப்புகள் மாற்றுவதில் இந்திய சினிமாவின் காட் ஃபாதராக விளங்கும் கமல்கூட ராதிகாவை தாய் கிழவி படத்தில் பார்த்துவிட்டு பாராட்டி மெசேஜ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இப்படத்துக்காக ராதிகாவுக்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைக்கும் என்று இப்போதே திரைத்துறையினர் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஹிந்தி பற்றி ராதிகா: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் ராதிகா. அப்போது ஹிந்தி குறித்து பேசிய அவர், "நான் ஹிந்தியை சரளமாக பேசுவேன். எங்களால் ஹிந்தி பேச முடியும்தாம். ஆனால் பேசத்தான் மாட்டோம். கலைஞர் கருணாநிதியோடு நான் பயணம் செய்ததால் ஹிந்தி என்றால் ஒரு திரை வந்துவிடுவதாக நினைக்கிறேன்" என்றார். முன்னதாக சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தடம் பதித்த ராதிகா; முதலில் தன் பயணத்தை திமுகவிலிருந்து ஆரம்பித்தார். இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











