தெலுங்குல உன்னை மதிப்பாங்க.. அங்க போய் நடினு வரலட்சுமிக்கு நான் தான் சொன்னேன்.. ராதிகா ஓபன்
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார், சரஸ்வதி என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்க உள்ளார். படத்தின் புரோமோஷன் விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட ராதிகா சரத்குமார் பேசுகையில் குறிப்பிட்டு பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, அவர் பேசுகையில், " வரலட்சுமி சரத்குமார் சிறந்த நடிகை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் அவருக்கு ஒரு அறிவுரை கூறினேன். அதாவது, நீ தெலுங்கில் சென்று நடி, அங்கு உனது திறமைக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள் என்று கூறினேன். ரசிகர்கள் உனது வெற்றியைக் கொண்டாடுவார்கள் என்றும் கூறினேன். இதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நான் இப்படி சொன்னேன் என்பதற்காக தமிழில் மதிக்க மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. மாறாக தெலுங்கில் கிடைக்கும் மதிப்பும் வரவேற்பும் நம்மை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். நானும் தெலுங்கில் நடித்துள்ளேன். எனக்கும் தெலுங்கில் நல்ல நல்ல படங்கள் உள்ளது.

மதிப்பு: தெலுங்கில் நடிக்கச் சொன்னேன், சில ஆண்டுகள் தெலுங்கில் நடித்து விட்டு, ஒரு நாள் என்னிடம் வந்து நான் ஹைதராபாத்திற்கு மொத்தமாக குடிபெயர்ந்து விடலாம் என்று இருக்கிறேன் என்று கூறினார். அது எனக்கு ஆச்சரியத்தை எல்லாம் கொடுக்கவில்லை. நான் சொன்னதைப் போல தெலுங்கு சினிமா ரசிகர்கள் வரலட்சுமியின் நடிப்பை பாராட்டி, ஊக்குவித்தார்கள். இயக்குநரகாவும் வரலட்சுமி வெற்றி பெறுவார்" என்று பேசினார்.
அழுத வரலட்சுமி சரத்குமார்: ராதிகா இவ்வாறு பேச, பேச, ஆமாம் ஆமாம் என்பது போல தலை அசைத்து விட்டு, சிரித்துக் கொண்டே இருந்தார். அதேபோல் வரலட்சுமி பேசுகையில், ராதிகா எனது மூன்றாவது பெற்றோர். எனது வளர்ச்சியிலும் நலனிலும் கடந்த 25 ஆண்டுகளாக இன்னும் சொல்லப்போனால், எனது வாழ்க்கையின் பாதி அவரது பேரன்ட்டிங்கில் தான் இருந்து இருக்கிறேன் என்று கூறினார். வரலட்சுமி சரத்குமார் ராதிகா குறித்து பேச பேச அழுதுவிட்டார். இவர்கள் இருவரும் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சரஸ்வதி படம் வரும் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு தியேட்டர்களில் ராதிகாவின் தாய் கிழவி படம் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளது. இந்த படத்தில் பிரியாமணி, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











