ராதிகா செய்த அட்வைஸ்.. செம போல்டான லேடி ப்பா.. மிரட்டிட்டாங்க.. வரலட்சுமி அசந்து போய் பார்க்குறாங்க

சென்னை: எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா; இயக்குநர் பாரதிராஜாவால் சினிமாவுக்கு வந்தவர். முதல் சில படங்களோடு காணாமல் போய்விடுவார் என இஷ்டத்துக்கு பலர் பேசினார்கள். அப்படி பேசியவர்கள் இப்போது காணாமல் போய்விட்டார்கள்; ராதிகா ஒரு பெண் எம்.ஆர்.ராதாகவாக கலக்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தாய் கிழவி திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இந்நிலையில் அவர் சூப்பர் அட்வைஸ் ஒன்றை செய்திருக்கிறார்.

கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா அறிமுகமானபோது; அவரது தேகம், நிறத்தை வைத்து ஓட்டாதவர்களே இருக்க முடியும். அவர் காதுபடவே ரொம்பவே கிண்டலாக பேசியவர்கள் எல்லாம் உண்டு. அவரோ அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை; தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருந்தார்; நடிப்பில் வித்தியாசத்தை காட்டிக்கொண்டே இருந்தார்; அதன் காரணமாக வென்றுகொண்டே இருக்கிறார். ஹீரோயினாக எப்படி டாப் இடத்தில் இருந்தாரோ அதேபோ குணசித்திர வேடங்களில் எல்லாம் ரகளை செய்திருந்தார். ஜீன்ஸ் படத்தில் எல்லாம் அவர் ஏற்றிருந்த கேரக்டரை தனது நடிப்பால் அனைவரையும் வெறுக்க வைத்திருந்தார். அதுதான் உண்மையான வெற்றி.

தர்மதுரையிலும் அட்டகாசம்: அதேபோல் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான தர்மதுரை திரைப்படத்திலும் கிராமத்து தாயாக சக்கைப்போடு போட்டிருப்பார். கண்டிப்பான உடல்மொழி இருந்தாலும் தன் மகன் மீது அவர் கொண்டிருக்கும் பாசத்தை காண்பிக்கு இடங்களில் எல்லாம் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார். இப்படி ஏகப்பட்ட படங்களில் தனது நடிப்பால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொண்டே வருகிறார். ஆனாலும் அவருக்கு தேசிய விருது கிடைக்காதது அனைவருக்குமே ஏமாற்றம்தான்.

Radhika Sarathkumar s Powerful Advice Leaves Varalaxmi Sarathkumar Stunned at Event
Photo Credit:

தாய் கிழவி பவுனுத்தாயி: ஆனால் அந்த விருது கண்டிப்பாக தாய் கிழவி படத்துக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை வருடங்களில் அவர் எத்தனையோ கேரக்டர்களை ஏற்றிருந்தாலும்; தாய் கிழவி பவுனுத்தாயி கேரக்டர் தனி இடத்தை பிடித்திருக்கிறது. இப்போதைய காலத்தில் இப்படி ஒரு கேரக்டரை ஏற்று நடித்தால் கண்டிப்பாக வெற்றியடையலாம் என்பதை மற்ற நடிகைகளுக்கு ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறார் லேடி நடிகவேள். இந்நிலையில் அவர் பேசிய பேச்சு ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

ராதிகா பேச்சு: ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "நான் சொல்வதை சிம்ரன் உள்ளிட்ட மற்ற நடிகைகள் புரிந்துகொள்வார்கள். இப்போது நான் தாய் கிழவி என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அது மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. சரி அதெல்லாம் இருக்கட்டும். நான் ஓகேதான். சந்தோஷமாக இருக்கிறேன். பெருமையாகவும் உணர்கிறேன். ஆனால் அதைவிட ஒரு விஷயத்தில் பெருமையாக இருக்கிறேன். அது என்னவென்றால், 'பெண்களுக்கான ஒரு தரத்தை நான் நிர்ணயித்திருக்கிறேன்'.

Also Read
Thaai Kizhavi Day 5 Box Office - தாய் கிழவி 5வது நாள் வசூல் சூப்பர்.. பவுனுத்தாயி பக்கா மாஸ் பாஸ்
Thaai Kizhavi Day 5 Box Office - தாய் கிழவி 5வது நாள் வசூல் சூப்பர்.. பவுனுத்தாயி பக்கா மாஸ் பாஸ்

வயது ஒரு விஷயமே இல்லை: வயதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அது ஒரு முடிவும் இல்லை. சினிமா துறை எப்படி இயங்குகிறது என்பதை கவனிக்க வேண்டும். நான் நானாக இருக்கிறேன். முடிவுகளை நான் மட்டும்தான் எடுக்கிறேன். அப்படித்தான் நான் ஆரம்பித்தேன். உங்களுக்கும் ஒன்று சொல்கிறேன், 'ஏதாவது உங்களுக்கு வந்து சேராமல் உங்களை கடந்து போகிறது என்றால். அதை போக விடுங்கள் வருத்தப்படாதீர்கள். அதைவிட பெரிதாக ஒன்று உங்களுக்காக காத்திருக்கிறது'. ஒருமுறை சிம்ரன் என்னிடம், 'மேடம் நல்ல கேரக்டரை தேர்ந்தெடுக்க வேண்டும்' என கூறினார். அதற்கு நானோ, கவலைப்படாதே. உன்னை தேடி வரும் என சொன்னேன். அப்படி வந்தது. சிம்ரன் இப்போது இங்கே இருக்கிறார். எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது." என்றார். அவர் இப்படி பேசும்போது சிம்ரன், ப்ரியாமணி, வரலட்சுமி ஆகிய நடிகைகள் அப்படியே அசந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X