கமல் ஹாசனுடன் முத்த காட்சி.. நோ சொன்னேன்.. வாய்ப்புகள் நழுவின.. பரபரப்பை கிளப்பிய ராதிகா சரத்குமார்
சென்னை: நடிகர் கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே அவரது நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நடிகை ராதிகா கமல் ஹாசன் குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கமலின் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 படம் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த அப்படத்தில் கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரகனி, தம்பி ராமைய்யா என பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான அந்தப் படம் படுதோல்வியையும், கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. இருந்தாலும் இந்தியன் படத்தின் மூன்றாவது பாகம் கண்டிப்பாக இதற்கு பதிலடி கொடுக்கும் என்று கமலின் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் இந்தியன் 2 வாரியது கமலுக்கு கொஞ்சம் அப்செட் என்றே கூறப்படுகிறது.

தக் லைஃப்: இந்தியன் 2 படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார் கமல் ஹாசன். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.இந்தப் படத்தை முடித்துவிட்டு சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படி கமல் ஹாசன் மீண்டும் சினிமாவில் படு பிஸியாகியிருப்பதன் காரணமாக அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பிலும் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல்.
ராதிகா பேட்டி: இந்நிலையில் கமல் ஹாசன் குறித்து ராதிகா பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் பேசுகையில், "கமல் ஹாசன் படங்கள் என்றாலே பொதுவாக அதில் முத்த காட்சிகள் இருக்கும். இளைஞர்களை கவர்வதற்காக இதுபோன்ற காட்சிகளை திரைப்படங்களில் வைப்பதற்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். ஒருகாலத்தில் கமலின் படங்கள் என்றாலே முத்த காட்சிகள் இருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.
வாய்ப்புகள் நழுவின: அப்படி இருக்கும் முத்த காட்சிகளில் சில நடிகைகள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நடிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் அந்தக் காட்சிகளுக்கு பயந்துகொண்டு கமலின் படங்களிலேயே நடிப்பதில்லை. அவர் படங்களில் உதடுகளை அழுத்தி முத்தம் கொடுப்பார். ஆனால் நான் அதை தடுத்தேன். அப்போது என்னை சிலர் எதிர்த்தார்கள். முக்கியமாக அதற்கு பிறகு பல வாய்ப்புகள் நழுவி போயின" என்றார்.
பரபரப்பு: ராதிகாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. முக்கியமாக கமல் ஹாசன் கட்டாயப்படுத்தித்தான் முத்த காட்சிகளில் நடிகைகளை நடிக்க வைக்கிறாரா என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள், இதேபோல்தான் புன்னகை மன்னன் படத்தில் நடித்தபோதும்கூட ஒரு அனுபவத்தை ரேகா பகிர்ந்திருந்தார் என்று அந்த வீடியோவையும் அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ராதிகா அண்மையில்கூட ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசுகையில், மலையாள திரையுலகில் நடிகைகள் உடை மாற்றும் கேரவனில் கேமராவை வைத்து அதை பார்த்து ரசிப்பார்கள் என்று சொல்லி பரபரப்பை பற்ற வைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











