உங்களுக்கு வெட்கமா இல்லையா?.. ராதிகாவை திட்டிய தனுஷ்.. எதுக்கு தெரியுமா?

சென்னை: நடிகை ராதிகா கோலிவுட்டில் சீனியர் நடிகைகளில் ஒருவர். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். சரத்குமாரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அவர் தற்போதும் சினிமாவில் பிஸியாக நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் தனக்கு ஃபோன் செய்து திட்டிவிட்டதாக தெரிவித்திருந்தார். அந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தவிர்க்கவே முடியாத ஆளுமை எம்.ஆர்.ராதா. பெரியாரின் தீவிர தொண்டரான அவருக்கு பிறந்தவர்தான் ராதிகா. வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்திருந்த அவரை எதேச்சையாக பார்த்த பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். ஆனால் முதலில் படத்தில் நடிப்பதற்கு ராதிகாவுக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் விடாத பாரதிராஜா எப்படியோ ராதிகாவிடம் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்.

Radhika Talks about Dhanush at Latest Interview Goes Trending


முன்னணி நடிகை: ராதிகாவின் முதல் படமான கிழக்கே போகும் ரயில் மெகா ஹிட்டடித்தது. முக்கியமாக ராதிகாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல அப்ளாஸ் கிடைத்தது.முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து டாப் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசத்தையும் காண்பிக்க ஆரம்பித்தார்.

திருமணம்: சினிமாவில் பீக்கில் இருந்தபோது அவர் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண உறவு பாதியில் முடிந்தது. இதனையடுத்து நடிகர் விஜயகாந்த்தை அவர் தீவிரமாக காதலித்ததாகவும் ஆனால் அந்தக் காதல் சில காரணங்களால் கைகூடாமல் போனதாகவும் ஒரு பேச்சு உண்டு. இறுதியாக நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

பிஸியான நடிகை: ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு குறைய ஆரம்பிக்க குணசித்திர வேடங்களில் நடித்து ரகளை செய்தார் ராதிகா. ஜீன்ஸ், சூர்யவம்சம் உள்ளிட்ட படங்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்திலும் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருந்த அவர்; கடைசியாக மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். சினிமா தவிர்த்து சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என ஏகப்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.'

ராதிகா பேட்டி: இந்நிலையில் ராதிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "ஒருநாள் தனுஷ் எனக்கு ஃபோன் செய்தார். அப்போது அவர் என்னிடம், அக்கா விஷயம் தெரியுமா? விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்று சொன்னார். உடனே நான், என்னடா சொல்ற. விளையாடாத. நான் இப்போதானே அவங்களோட ஷூட்டிங்கை முடிச்சுட்டு வந்தேன் என சொன்னேன்.

வெட்கமா இல்லையா?: உடனே தனுஷோ, உங்களுக்கு வெட்கமா இல்லையா?.. பெரிய நடிகைனு சொல்லிக்கிறீங்க. இதைக்கூடவா உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்னார். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகிவிட்டது. ஏனென்றால் நானும் ரௌடிதான் ஷூட்டிங்கில் அவர்கள் காதலிப்பதை கண்டே பிடிக்க முடியவில்லை. ஏனெனில் எந்த இடத்திலும் அவர்கள் முறை தவறாமல் தங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X