நடிப்பு ராட்சசி ராதிகாவின் வீடியோ.. நெகிழ்ந்துபோன மகள்.. செம ரீ க்ரியேஷன் போங்க
சென்னை: ஹீரோயினாக கலக்கிய ராதிகா இப்போது குணசித்திர வேடங்களிலும் ரவுண்டு கட்டி அடித்துவருகிறார். கடைசியாக அவர் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா திரைப்படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ராதிகாவின் மகளான ரயான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை பெற்று ட்ரெண்டாகியிருக்கிறது.
பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா. அவரது தந்தை எம்.ஆர்.ராதா பெரிய நடிகராக வலம் வந்திருந்தாலும் நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லாமல்தான் இருந்தார் ராதிகா. ஆனால் இயக்குநர் இமயம் எப்படியோ அவரை நடிக்க வைத்துவிட்டார். முதல் படத்திலேயே பெயர், விருது, புகழ் என அனைத்தும் கிடைத்தது. இதன் காரணமாக டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தார்.
மற்ற மொழிகளிலும்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஹீரோயினாக நடித்து புகழடைந்தார். எந்த ரோல் கொடுத்தாலும் அதை மிகச்சிறப்பாக தனது நடிப்பின் மூலம் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லக்கூடிய நடிகையாக மாறினார். ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர்; ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததால் சீரியல்கள், குணசித்திர வேடங்களில் நடித்தார்.

திருமணங்கள்: முதலில் அவர் இயக்குநர் பிரதாப் போத்தனை திருமணம் செய்தார். ஆனால் சில கரணங்களால் அந்த திருமண உறவு பாதியில் முடிந்தது. இதற்கிடையே விஜயகாந்த்தை அவர் தீவிரமாக காதலித்துவந்ததாகவு ஒரு பேச்சு ஓடியது. சூழல் இப்படி இருக்க நடிகர் சரத்குமாரை காதலித்த ராதிகா அவரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
சிறந்த குணம் உடைய ராதிகா: சரத்குமாருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடந்திருந்தது. சரத்துக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. வரலட்சுமி மற்றும் சாயா தேவியுடன் நல்லவிதமான உறவைத்தான் பேணிவருகிறார் ராதிகா. கடந்த வருடம் நடந்த வருவின் திருமணத்தை முன்நின்று நடத்தியது, வரலட்சுமியை சினிமாவில் நடிக்க வைக்க சரத்திடம் பெர்மிஷன் வாங்கியது என ராதிகா அத்தனையிலும் பங்காற்றிவந்திருக்கிறார்.
மகள் பகிர்ந்த வீடியோ: இந்நிலையில் ராதிகாவின் மகளான ரயான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது ஜீன்ஸ் படத்தில், 'ஆடு வாங்க தெரியாது கோழி வாங்க தெரியாது.. சோடா மட்டும் வாங்கியார தெரியுமோ' என அவர் பேசும் வசனம் படு ஃபேமஸ். அந்த சீனில் ராதிகா அவ்வளவு அட்டகாசமாக நடித்திருப்பார். இந்த சீனைத்தான் ரீ க்ரியேட் செய்து நடித்திருக்கிறார் ராதிகா. அவ்வீடியோவை பகிர்ந்திருக்கும் ரயான் ராதிகா பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவையும் போட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











