»   »  மறுபடியும் ஏறிய ரகஸ்யா!

மறுபடியும் ஏறிய ரகஸ்யா!

Subscribe to Oneindia Tamil

இடையில் இறக்கிய சம்பளத்தை இப்போது மறுபடியும் ஏற்றி விட்டாராம் ரகஸ்யா. ரகசியமாக சொல்லிப் புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட (பாவப்பட்ட?) தயாரிப்பாளர்கள்.

மும்பையிலிருந்து மொள்ளமாக ஓடி வந்து வசூல் ராஜா மூலம் படு வேகம் பிடித்தவர் பாம்பே க்வீன் ரகஸ்யா. வந்த புதிதில் சின்னதாக குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த அபிநயஸ்ரீ உள்ளிட்ட சிலுமிஷ நாயகிகளை ஓரம் கட்டி திண்ணைக்கு அனுப்பிய ரகஸ்யா, தனது திணவெடுத்த கவர்ச்சி ஆட்டத்தால் கதி கலக்கினார்.

அடுத்தடுத்து படங்கள் குவிந்ததால் டப்பென்று டப்பை ஏற்றினார். இதனால் தயாரிப்பாளர்கள் யோசித்தாலும், ரகஸ்யாவின் கிளாமர் ஆட்டத்துக்கு இருந்த மவுசால், கொடுத்து ஆட வைத்தார்கள்.

ஆனால் திடீரென ரகஸ்யாவின் மார்க்கெட் சரிவு கண்டது. புதுப் புது குத்து சுந்தரிகள் கொத்துக் கொத்தாக வந்து குவிந்ததால், ரகஸ்யாவை அப்படியே போட்டு விட்டு அடுத்த டிராக்குக்கு மாறினர் தயாரிப்பாளர்கள்.

இதனால் சோர்ந்து போன ரகஸ்யா சம்பளத்தைக் குறைத்து வாங்கோ வாங்கோ என கூவினார். கை மேல் பலனாக சில படங்கள் கிடைத்தது. மறுபடியும் மரத்தில் ஏறிய குரங்கு கதையாக, குறைத்த சம்பளத்தை தற்போது மீண்டும் கூட்டி விட்டாராம் ரகஸ்யா.

ஒரு பாட்டுக்கு ஆட இப்போது 5 லட்சம் கேட்கிறாராம் ரகஸ்யா. இதனால் கடுப்பாகிப் போன தயாரிப்பாளர்கள் மறுபடியும் ரகஸ்யாவை கைவிட்டு விடலாமா என கன்னத்தில் கை வைத்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆனால், ரகஸ்யாவின் எண்ணமோ வேறு மாதிரியாக இருக்கிறதாம். தமிழ் தன்னை மொத்தமாக மொட்டை அடித்து விட்டார் போஜ்பூரிக்குத் தாவி பொங்கி எழும் திட்டத்தில் உள்ளாராம் ரகஸ்யா.

ஆத்தா ரம்பா, வந்துருச்சும்மா ஆபத்து!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil