சோகக் குயில் ரகஸ்யா! குலுக்கல் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை சிலாகிக்க வைத்து சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கும் ரகஸ்யா நிஜத்தில் ஒரு சோகக் குயில். திரையில்தான்அவரது ஆட்டத்தில் உற்சாகம் கொந்தளிக்கும், ஆனால் நிஜ வாழ்க்கையிலோ பத்து சுனாமிக்கு சமமான சோகம் இருக்கிறதாம்.ஓவர் டூ மும்பை! இங்கேதான் நம்ம ரகஸ்யாவின் வீடு இருக்கிறது. அடடா, பெரிய பங்களவாக இருக்கும் போலிருக்கே என்று நினைத்தால் சட்டென அதைஅழித்து விடுங்கள். படு சாதாரண நடுத்தர வர்க்கத்து வீடுதான் ரகஸ்யாவின் வீடு.அவருடைய அப்பா பப்பு சாதாரண புகைப்படக்காரர். அதில் அவருக்குப் பெரிய வருமானம் இல்லை. அம்மா வீட்டிலிருந்தபடியே துணி தைத்துக் கொடுத்துசம்பாதித்து வந்தார். இவர்களுக்கு இரண்டே பெண் குழந்தைகள். மூத்தவர் ரகஸ்யா, இரண்டாவது ரூபா.ரகஸ்யா நடிக்க வருவதற்கு முன்பு அவரோட அம்மாவுக்கு உதவியா இருந்தாராம். எம்பிராய்டரி போடுவது, பட்டன் வைப்பது, துணி கிழித்துக் கொடுப்பதுஎன சமர்த்துப் பெண்ணாக இருந்திருக்கிறார். ரகஸ்யாவுக்கு தன்னோட அம்மா, அப்பா, தங்கை மேல் ரொம்பவும் பாசமாம்.என்னோட தங்கைக்கு விமான பனிப் பெண்ணாக ஆக வேண்டும் என ரொம்ப ஆசை, அதற்காகத்தான் ரொம்ப சின்சியரா படிக்கிறா. அவளோடவிருப்பத்தை நான் நிச்சயம் நிறைவேத்தி வைப்பேன். அவளோட கண்களிலிருந்து ஒரு சொட்டு தண்ணியைக் கூட நான் பார்க்கக் கூடாது. அப்படி வளர்த்து வருகிறேன்என்கிறார் ரகஸ்யா உருக்கமாக.ஒரு கட்டத்துல சாப்பிடக் கூட காசு இல்லாம ரகஸ்யா குடும்பம் கஷ்டப்பட்டதாம். இதனால்தான் ரகஸ்யா நடிக்க முடிவு செய்தாராம். ஆனால் அதற்காகமுதலில் புகைப்பட ஆல்பம் தயாரிக்க வேண்டுமே. அதற்குக் கூட அப்போது அவர்களிடம் காசு இல்லையாம். அப்புறம் அவரோட அப்பாவோட சிநேகிதர்ஒருவர் பணம் கொடுத்து புகைப்படம் எடுக்க உதவினாராம். அதை வைத்து ஆல்பம் தயாரித்து சில சினிமா கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் ஒரு புகைப்படம் இயக்குநர் சரணின் கண்களில் பட கோலிவுட்டுக்கு வந்து சேர்ந்தார் ரகஸ்யா. வதசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் அவர் ஆடிய சீனாதானா பாடல் ரகஸ்யாவை எங்கேயோ கொண்டு போய் விட்டு விட்டது. இன்று குத்தாட்டத்தில் ரகஸ்யாவை விட்டால் ஆளே இல்லை எனும் அளவுக்குபடு பிசியாக கோலோச்சி வருகிறார்.குத்தாட்டத்தில் ரகஸ்யா பெரிய நிபுணியாக இருந்தாலும் அவரது மனதிற்குள் வேறு மாதிரியான தாகம்தான் இருக்கிறது. நல்ல கேரக்டர் செய்யனும், விருதுவாங்கும் அளவுக்கு அருமையாக நடிக்கனும், அனைவரும் விரும்பும் விதமான ரோல்களை செய்யனும் என்று போகிறது அவரது ஆசைப் பட்டியல். அதை விட சூப்பர் கேரக்டராக இருக்கிறார் ரகஸ்யா. படத்தில் எப்படி வேண்டுமானாலும் நடிக்க நான் தயார். காரணம் அது எனது தொழில். முதலாளியின்(தயாரிப்பாளர், இயக்குநர் ரெண்டு பேரும்தான்) உத்தரவுப்படி நடக்க வேண்டியது எனது கடமை.ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் 100 சதவீதம் ஒழுக்கத்துடன் இருக்கிறேன். யாருடைய காதல் வலையிலும் நான் விழ மாட்டேன். தேவையில்லாதவிஷயங்களில் தலையிட மாட்டேன். யாரையும் காக்காய் பிடிக்க மாட்டேன்.ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னிடம் சிலர் தவறான பார்வையுடன் பார்த்து, பேச முயற்சிப்பதுண்டு. நான் அவர்களை கட் அண்ட் ரைட்டாக தவிர்த்து விடுவேன். அதுமட்டும்தான் எனக்க வேதனையாக இருக்கிறது.என்னோட ஆசையெல்லாம் எனது தங்கையை பெரிய ஏர் ஹோஸ்டஸ்ஸாக ஆக்க வேண்டும். எனக்குக் கிடைக்காத அத்தனை வசதிகளையும் அவளுக்குக்கொடுக்க வேண்டும். மொத்தத்துல ஒரு ராணி மாதிரி அவளை வச்சுக்கனும்.ரகஸ்யாவுக்குள் இத்தனை சோகங்களா!

By Staff

குலுக்கல் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை சிலாகிக்க வைத்து சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கும் ரகஸ்யா நிஜத்தில் ஒரு சோகக் குயில். திரையில்தான்அவரது ஆட்டத்தில் உற்சாகம் கொந்தளிக்கும், ஆனால் நிஜ வாழ்க்கையிலோ பத்து சுனாமிக்கு சமமான சோகம் இருக்கிறதாம்.

ஓவர் டூ மும்பை! இங்கேதான் நம்ம ரகஸ்யாவின் வீடு இருக்கிறது. அடடா, பெரிய பங்களவாக இருக்கும் போலிருக்கே என்று நினைத்தால் சட்டென அதைஅழித்து விடுங்கள். படு சாதாரண நடுத்தர வர்க்கத்து வீடுதான் ரகஸ்யாவின் வீடு.

அவருடைய அப்பா பப்பு சாதாரண புகைப்படக்காரர். அதில் அவருக்குப் பெரிய வருமானம் இல்லை. அம்மா வீட்டிலிருந்தபடியே துணி தைத்துக் கொடுத்துசம்பாதித்து வந்தார். இவர்களுக்கு இரண்டே பெண் குழந்தைகள். மூத்தவர் ரகஸ்யா, இரண்டாவது ரூபா.


ரகஸ்யா நடிக்க வருவதற்கு முன்பு அவரோட அம்மாவுக்கு உதவியா இருந்தாராம். எம்பிராய்டரி போடுவது, பட்டன் வைப்பது, துணி கிழித்துக் கொடுப்பதுஎன சமர்த்துப் பெண்ணாக இருந்திருக்கிறார். ரகஸ்யாவுக்கு தன்னோட அம்மா, அப்பா, தங்கை மேல் ரொம்பவும் பாசமாம்.

என்னோட தங்கைக்கு விமான பனிப் பெண்ணாக ஆக வேண்டும் என ரொம்ப ஆசை, அதற்காகத்தான் ரொம்ப சின்சியரா படிக்கிறா. அவளோடவிருப்பத்தை நான் நிச்சயம் நிறைவேத்தி வைப்பேன். அவளோட கண்களிலிருந்து ஒரு சொட்டு தண்ணியைக் கூட நான் பார்க்கக் கூடாது. அப்படி வளர்த்து வருகிறேன்என்கிறார் ரகஸ்யா உருக்கமாக.

ஒரு கட்டத்துல சாப்பிடக் கூட காசு இல்லாம ரகஸ்யா குடும்பம் கஷ்டப்பட்டதாம். இதனால்தான் ரகஸ்யா நடிக்க முடிவு செய்தாராம். ஆனால் அதற்காகமுதலில் புகைப்பட ஆல்பம் தயாரிக்க வேண்டுமே. அதற்குக் கூட அப்போது அவர்களிடம் காசு இல்லையாம். அப்புறம் அவரோட அப்பாவோட சிநேகிதர்ஒருவர் பணம் கொடுத்து புகைப்படம் எடுக்க உதவினாராம். அதை வைத்து ஆல்பம் தயாரித்து சில சினிமா கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் ஒரு புகைப்படம் இயக்குநர் சரணின் கண்களில் பட கோலிவுட்டுக்கு வந்து சேர்ந்தார் ரகஸ்யா. வதசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் அவர் ஆடிய சீனாதானா பாடல் ரகஸ்யாவை எங்கேயோ கொண்டு போய் விட்டு விட்டது. இன்று குத்தாட்டத்தில் ரகஸ்யாவை விட்டால் ஆளே இல்லை எனும் அளவுக்குபடு பிசியாக கோலோச்சி வருகிறார்.

குத்தாட்டத்தில் ரகஸ்யா பெரிய நிபுணியாக இருந்தாலும் அவரது மனதிற்குள் வேறு மாதிரியான தாகம்தான் இருக்கிறது. நல்ல கேரக்டர் செய்யனும், விருதுவாங்கும் அளவுக்கு அருமையாக நடிக்கனும், அனைவரும் விரும்பும் விதமான ரோல்களை செய்யனும் என்று போகிறது அவரது ஆசைப் பட்டியல்.

அதை விட சூப்பர் கேரக்டராக இருக்கிறார் ரகஸ்யா. படத்தில் எப்படி வேண்டுமானாலும் நடிக்க நான் தயார். காரணம் அது எனது தொழில். முதலாளியின்(தயாரிப்பாளர், இயக்குநர் ரெண்டு பேரும்தான்) உத்தரவுப்படி நடக்க வேண்டியது எனது கடமை.


ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் 100 சதவீதம் ஒழுக்கத்துடன் இருக்கிறேன். யாருடைய காதல் வலையிலும் நான் விழ மாட்டேன். தேவையில்லாதவிஷயங்களில் தலையிட மாட்டேன். யாரையும் காக்காய் பிடிக்க மாட்டேன்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னிடம் சிலர் தவறான பார்வையுடன் பார்த்து, பேச முயற்சிப்பதுண்டு. நான் அவர்களை கட் அண்ட் ரைட்டாக தவிர்த்து விடுவேன். அதுமட்டும்தான் எனக்க வேதனையாக இருக்கிறது.

என்னோட ஆசையெல்லாம் எனது தங்கையை பெரிய ஏர் ஹோஸ்டஸ்ஸாக ஆக்க வேண்டும். எனக்குக் கிடைக்காத அத்தனை வசதிகளையும் அவளுக்குக்கொடுக்க வேண்டும். மொத்தத்துல ஒரு ராணி மாதிரி அவளை வச்சுக்கனும்.

ரகஸ்யாவுக்குள் இத்தனை சோகங்களா!

Read more about: ragasyas story
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X