போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி; நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி சிக்கியது எப்படி?

பெங்களூரு: கன்னட திரையுலக நடிகைகளான ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பது FSL சோதனை முடிவில் உறுதியாகி உள்ளது.

பாலிவுட்டை தொடர்ந்து கன்னட திரையுலகிலும் போதைப் பொருள் புழக்கம் அதிக அளவில் நடைபெற்று வந்ததை தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சோதனை செய்ததில் கன்னட திரையுலகில் பல முக்கிய பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரபல நடிகைகளான ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது.

பார்ட்டிகளில்

பார்ட்டிகளில்

நடிகர்கள் நடிகைகள் பெரும்பாலும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். மது போதை எல்லாம் கடந்து பார்ட்டிகளில் தடை செய்யப்பட்ட பல போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போதை தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில் நாடு முழுவதும் பல பிரபலங்கள் சிக்கி வருகின்றனர்.

பாலிவுட்டில் பூதாகரம்

பாலிவுட்டில் பூதாகரம்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரண வழக்கை விசாரித்த போலீசார் அவரது முன்னாள் காதலி மற்றும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தியை கைது செய்து விசாரித்ததில் போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டில் பூதாகரம் ஆனது.

தீபிகா படுகோன் முதல்

தீபிகா படுகோன் முதல்

பாலிவுட்டின் பல பிரபலங்களின் தலைகளும் இந்த விவகாரத்தில் உருண்டது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் போதைப் பொருள் வாட்ஸ் அப் குழுவின் அட்மின் என்கிற தகவல் உட்பட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முன்னணி நடிகைகளான சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், தீபிகா படுகோன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சாண்டில்வுட்டில்

சாண்டில்வுட்டில்

பாலிவுட்டை தொடர்ந்து சாண்டில்வுட்டான கன்னட திரையுலகிலும் போதைப் பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடும் தகவல்கள் மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு கிடைக்க அங்கேயும் தீவிர வேட்டையை சிபிஐ மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் நடத்த ஆரம்பித்தனர். அதன் விளைவாக 14க்கும் மேற்பட்ட பிரபலங்கள், போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராகினி திவேதி கைது

ராகினி திவேதி கைது

ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தில் இன்னொரு நாயகியாக நடித்த நடித்திருந்த பிரபல கன்னட நடிகை ராகினி திவேதியின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த செப்டம்பர் 2020ல் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அவரை போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்தனர்.

சஞ்சனா கல்ராணி கைது

சஞ்சனா கல்ராணி கைது

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும் பிரபல கன்னட நடிகையுமான சஞ்சனா கல்ராணியும் போதைப் பொருள் விவகாரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 2006ம் ஆண்டு வெளியான ஒரு காதல் செய்வீர் எனும் தமிழ் படத்திலும் இவர் நடித்துள்ளார். போடா முண்டம் எனும் தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

இருவருக்கும் ஜாமின்

இருவருக்கும் ஜாமின்

நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி இருவருக்கும் போலீஸ் காவல் முடிந்த பிறகு சிறையில் அடைத்தனர். அவர்களின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் போதைப் பொருள் கலக்கப்படவில்லை என தெரிய வந்த பின்னர் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி

போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி

இந்நிலையில், தற்போது நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியது FSL எனும் சோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் அதிரடியாக தெரிவித்துள்ளனர். அது குறித்த ஆதாரங்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளனர்.

சிக்கியது எப்படி

சிக்கியது எப்படி

பொதுவாக போதைப் பொருள் பயன்படுத்தியவர்களின் சிறுநீர் அல்லது ரத்த மாதிரிகளை 24 மணிநேரத்திற்குள் சோதனை செய்தால் மட்டுமே அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தால் தெரிய வருமாம். இதுவரை போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பலருக்கும் இந்த இரு சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டு வருவது வழக்கம். ஆனால், அதை தாண்டி FSL எனும் சோதனையின் மூலம் இந்த இரு நடிகைகளும் தற்போது சிக்கி உள்ளனர்.

அது என்ன சோதனை

அது என்ன சோதனை

போதைப் பொருள் பயன்படுத்தியவர்களின் தலை முடியை கொண்டு நடத்தப்படும் சோதனை தான் FSL. போதைப் பொருள் பயன்படுத்தியவர்களின் தலை முடியை வைத்து ஒரு ஆண்டுக்குள் சோதனை செய்தால் அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தினார்களா? இல்லையா? என்பதை கண்டுபிடித்து விட முடியுமாம். அப்படித் தான் இருவரும் தற்போது சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பலரும் சிக்குவார்கள்

பலரும் சிக்குவார்கள்

இதே முறையில் போதைப் பொருள் விவகாரத்தில் சோதனை நடத்தினால் பல பிரபலங்களும் முன்னணி நடிகைகளும் சிக்குவார்கள் என்கிற அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகி உள்ளன. போதைப் பொருள் விவகாரத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் முழு முயற்சியுடன் மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி மீண்டும் சிறைக்கு செல்வது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X