twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'விசாரணைக்கு ஒத்துழைப்பேன்..' போதை வழக்கு.. போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான பிரபல நடிகை!

    By
    |

    பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள, நடிகை ராகிணி போலீஸ் ஸ்டேஷனில் இன்று கையெழுத்திட்டார்.

    கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டனர்.

    சஞ்சனா கல்ராணி

    சஞ்சனா கல்ராணி

    இந்த வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதி, செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை அடுத்து, நடிகை சஞ்சனா கல்ராணி செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்கள் நண்பர்கள் உட்பட 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மருத்துவக் காரணம்

    மருத்துவக் காரணம்

    இந்நிலையில், நடிகைகள் 2 பேரும் ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இரண்டு பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் மருத்துவக் காரணங்களுக்காக, நடிகை சஞ்சனாவுக்கு கர்நாடக ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.
    இதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    150 நாட்களுக்குப் பிறகு

    150 நாட்களுக்குப் பிறகு

    இதையடுத்து சமீபத்தில் நடிகை ராகிணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து 150 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார். வீட்டில் ஓய்வு எடுத்துவந்த அவர், மீடியாவிடம் எதுவும் பேசாமல் இருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராகிணி கூறியதாவது: சாதாரண குடிமகன்களைப் போலவே எனது உரிமைகளும் சட்டப்படி பாதுகாக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

    நம்பிக்கை அதிகரிப்பு

    நம்பிக்கை அதிகரிப்பு

    நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 12 வருடமாக இந்த சினிமாதுறையில் நான் இருக்கிறேன். இதில் உள்ளவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும். நான் இப்போது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். இப்போது எதையும் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

    போலீஸ் ஸ்டேஷன்

    போலீஸ் ஸ்டேஷன்

    இந்நிலையில், போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான அவர், கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோர்ட் உத்தரவுபடி, போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி இருக்கிறேன். நீதித்துறையின் மீதான என் நம்பிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்றார்.

    English summary
    Actress Ragini Dwivedi follows judicial protocol, marks attendance at the police station.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X