»   »  காவிரி எங்களுடையதாக்கும்.. ட்விட்டரில் குரல் கொடுத்த நடிகை ராகினி#cauvery

காவிரி எங்களுடையதாக்கும்.. ட்விட்டரில் குரல் கொடுத்த நடிகை ராகினி#cauvery

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி எங்களுடையது, அவர்களுக்கு எதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என கன்னட நடிகை ராகினி திவேதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ராகினி திவேதி. கன்னடா, மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடிக்கிறார்.

Ragini Dwivedi gets emotional over Cauvery issue

தமிழில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் ராகினி. இந்நிலையில் காவிரி பிரச்சனை குறித்து அவர் தனது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

காவிரி நம்முடையது. நமக்கே குடிக்க நீர் இல்லை. இந்நிலையில் அவர்களுக்கு எதற்காக நீர் தர வேண்டும். நம் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் வருகிறேன், நீங்களும் வாருங்கள் என்று கர்நாடகத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

English summary
Actress Ragini Dwivedi posted a video on twitter supporting Karnataka people over Cauvery issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil