நடிகையால் சண்டை, ஆர்.டி.ஓ. அதிகாரி மண்டை உடைப்பு: நள்ளிரவில் பரபரத்த ஸ்டார் ஹோட்டல்
பெங்களூர்: நடிகை ராகினி திவேதியுடன் சாப்பிட்டதால் ஆர்.டி.ஓ. அதிகாரியை அவரின் நண்பர் பீர் பாட்டிலால் தாக்கினார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் ராகினி திவேதி. ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்துள்ளார். அவர் தனது நண்பரான ஆர்.டி.ஓ. அதிகாரி ரவிசங்கருடன் பெங்களூர் ரெசிடென்சி சாலையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்.
இரவு 11.45 மணி அளவில் ராகினியின் மற்றொரு நண்பரான சிவபிரகாஷ் அதே ஹோட்டலுக்கு வந்தார்.

ராகினி
ஹோட்டலில் ராகினியுடன் ரவிசங்கரை பார்த்த சிவபிரகாஷ் கோபம் அடைந்தார். இதையடுத்து அவர் ராகினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பீர் பாட்டிலை எடுத்து ரவியின் தலையில் உடைத்தார். இதில் காயம் அடைந்த ரவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

போலீஸ்
சிகிச்சைக்கு பிறகு நேராக காவல் நிலையத்திற்கு சென்று சிவபிரகாஷ் மீது புகார் அளித்தார் ரவிசங்கர். அவரின் புகாரின்பேரில் போலீசார் சிவபிரகாஷ் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாக்குவாதம்
சம்பவம் குறித்து ரவிசங்கர் கூறியதாவது, நான், ராகினி மற்றும் சில நண்பர்களுடன் டின்னர் சாப்பிட சென்றேன். ஹோட்டலுக்கு வந்த சிவபிரகாஷ் நீ எதற்காக ராகினியுடன் வந்தாய் என்று கேட்டு என்னை திட்டினார். திடீர் என்று என் முகத்தில் குத்தியதுடன், பீர் பாட்டிலால் தாக்கினார் என்றார்.

உயிருக்கு ஆபத்து
என் நண்பர்கள் தான் சிவபிரகாஷிடம் இருந்து என்னை காப்பாற்றினார்கள். சிவபிரகாஷ் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிவபிரகாஷ் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரவிசங்கர்.


Click it and Unblock the Notifications











