த்ரிஷா, ராணா காதலை நான் அத்துவிட்டேனாக்கும்: ராகினி எரிச்சல்
பெங்களூர்: த்ரிஷா, ராணா காதலை நான் ஒன்றும் அத்துவிடவில்லை என்று கன்னட நடிகை ராகினி திவேதி தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவும், ராணாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவ்வப்போது பிரிவதும், சேர்வதுமாக இருந்தனர். அவர்கள் பிரியும்போது எல்லாம் ராணாவின் வாழ்க்கையில் வேறு ஒரு நடிகை நுழைந்துவிட்டார் என்று டோலிவுட் பரபரக்கும். இந்நிலையில் த்ரிஷாவும், ராணாவும் நிரந்தரமாக பிரிந்தனர். இந்த பிரிவுக்கு கன்னட நடிகை ராகினி திவேதி தான் காரணம் என்று பேச்சாக கிடந்தது.
இது குறித்து ராகினி கூறுகையில்,

த்ரிஷா, ராணா
த்ரிஷா, ராணா காதல் முறிய நான் தான் காரணம் என்று என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர்களாக பேசுகிறார்கள்.

ராகினி
த்ரிஷா, ராணா காதல் தோல்விக்கு என் மீது பழிபோட்டதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அது பற்றி பேசாமல் இருந்து வந்தேன்.

மௌனம்
என் மௌனத்தை தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள். எனக்கும், ராணாவுக்கும் இடையே நட்பு மட்டுமே உள்ளது, வேறு எதுவும் கிடையாது.

ராணா
நானும், ராணாவும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டால் உடனே நான் அவரை காதலிப்பதாக கூறிவிடுவதா? நான் அனைத்து சக நடிகர்களுடனும் நட்புடன் தான் பழகி வருகிறேன் என்று ராகினி தெரிவித்துள்ளார்.

காதலா?
நானும், த்ரிஷாவும் ஒருபோதும் காதலித்ததே இல்லை என்று அண்மையில் ராணா ஒரு பெரிய குண்டாக போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











