Asin: 10 வருஷமா யாரு கண்ணுலயும் படாம இருந்த அசின்.. திருமணநாளை ஜாம் ஜாம்னு கொண்டாடிய மைக்ரோமேக்ஸ் ஓனர்!

மும்பை: த்ரிஷாவுக்குப் பின் நயன்தாராவுக்கு முன் தென்னிந்திய சினிமாவையே கலக்கிக் கொண்டிருந்த நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் துணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை கடந்து 2016ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர், சினிமாவில் நடிப்பதையே விட்டு விட்ட அசின், பெரும்பாலும் மும்பையில் பாப்பராஸிகளின் கண்களில் கூட சிக்காமல் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில், 10 வருஷமா அசினை யாருமே பார்க்க முடியவே இல்லையே என சில பிரபலங்களே ட்விட்டரில் புலம்பியது ராகுல் ஷர்மா காதுகளுக்கு கேட்டுவிட்டது போல, தற்போது திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது என அசினின் புகைப்படங்களை வெளியிட்டு சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.

Rahul Sharma celebrates 10 year anniversary with Asin and shared some cute photos
Photo Credit:

அவரது போஸ்ட்டுக்கு கீழ் பல வருடங்கள் கழித்து அசினை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக கமெண்ட்டுகளை பதிவிட்டும், இப்படியொரு திறமையான நடிகையை வீட்டுக்குள் அடைத்து வைப்பது ஏன் என்றும் ராகுல் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

15 வருஷம் பக்கா மாஸ்: 2001ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அசின். தெலுங்கில் சில படங்களில் நடித்த அசின் 2004ம் ஆண்டு இப்போ ரவி மோகன் அப்போ ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம். குமரன் சன் ஆஃப் மகலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, போக்கிரி, வரலாறு, ஆள்வார், வேல், தசாவதாரம், காவலன், பாலிவுட்டில் கஜினி, ஹவுஸ்ஃபுல் 2, ஆல் இஸ் வெல் என ஏகப்பட்ட படங்களில் நடித்து 2015ம் ஆண்டு வரை இந்திய சினிமாவையே கலக்கிக் கொண்டிருந்தார்.

Rahul Sharma celebrates 10 year anniversary with Asin and shared some cute photos
Photo Credit:

10வது ஆண்டு திருமணநாள்: நடிகை அசினை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக எங்கேயும் காணவில்லை என்றும் சோஷியல் மீடியாவில் கூட அவர் ஆக்டிவாக இல்லை என்றும் ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில், திருமணமாகி 10 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக சந்தோஷமாக தனது மனைவியின் புகைப்படங்களை ஷேர் செய்து ராகுல் ஷர்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட போஸ்ட் வைரலாகி வருகிறது.

குடும்பத் தலைவி: சில நடிகைகள் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை முற்றிலுமாக விட்டு விட்டு குடும்பத் தலைவியாக மாறிவிடுகின்றனர். ஜோதிகா சில ஆண்டுகள் அப்படி சினிமாவுக்கு பிரேக் விட்டு குழந்தைகளை கவனித்து வந்தார். ஆனால், மீண்டும் நடிக்க ஆரம்பித்து அசத்தி வருகிறார். ஆர்யாவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் சாயிஷாவும் படங்களில் ஹீரோயினாக நடிப்பதில்லை. நடிகை அசின் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில், சினிமாவை விட்டு விலகியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஷாக் ஆக்கியது. நடிகை சுவலட்சுமியும் இப்படித்தான் எங்கே இருக்கிறார், என்ன பண்ணுகிறார் என்றே தெரியாமல் போய்விட்டது. இந்நிலையில், அசின் மீண்டும் கம்பேக் கொடுப்பாரா? என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X